Published:Updated:

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

வித்தியாசமான கதைக் களங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆதி, தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

வித்தியாசமான கதைக் களங்களில் ஹீரோவாக நடிக்கும் ஆதி, தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.

Published:Updated:
"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

'மிருகம்' படத்தின்மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ஆதி. நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் இவர், தற்போது தொடர்ந்து பிஸி. இவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்கள் குறித்துப் பேசினோம். 

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

''சினிமாவை எந்தவொரு தனிமனிதனும் இழுத்துட்டுப் போகமுடியாது. கதை, நல்ல டெக்னீஷியன்கள், நடிகர், நடிகைகள்... இவங்க எல்லோரும் இருந்தாதான், நல்ல படம் பண்ணமுடியும். இப்போதைய ஆடியன்ஸ் ரொம்பத் தெளிவா இருக்காங்க. வித்தியாசமா, சுவாரஸ்யமா ஏதாவது எதிர்பார்க்கிறாங்க!'' என்று பேச்சைத் தொடங்குகிறார் ஆதி. 

"கதைகளை எப்படித் தேர்ந்தெடுத்து நடிப்பீங்க?" 

"ஒரு ரசிகனாதான் படத்தோட கதையைக் கேட்பேன். ஒரு ரசிகனா, என்னை ஒரு கதை இம்ப்ரஸ் பண்ணிட்டா, அந்தப் படத்துல நடிப்பேன். எங்க வீட்டுல அப்பா, அண்ணன் ரெண்டுபேரும் சினிமாவுல இருக்கிறவங்க. அவங்ககிட்டேயும் எனக்கு வர்ற கதைகளை விவாதிப்பேன். ஆனா, அந்தக் கதையில நடிக்கலாமா, வேணாமான்னு நான்தான் முடிவு பண்ணுவேன்."  

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

"தடகள வீரரா ஒரு படத்துல நடிக்கிறீங்களாமே?" 

"நானும், தயாரிப்பாளர் கார்த்திக்கும் ஒரு படம் பண்ணணும்னு ரொம்பநாளா கதை கேட்டுக்கிட்டிருந்தோம். எந்தக் கதையும் சரியா செட் ஆகல. அப்போதான் ஒருநாள், 'ஸ்போர்ட்ஸ் கதை ஒண்ணு இருக்கு, பண்ணுவோமா?'னு கார்த்திக் கேட்டார். நானும் கதை கேட்டேன். எப்போவும் கதையைக் கேட்டுட்டு என் முடிவைச் சொல்ல ஒருநாள் டைம் எடுத்துக்குவேன். ஆனா, இந்தக் கதையைக் கேட்டதும் ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, கதையில விளையாட்டைத் தாண்டி, எமோஷனலா ஒரு விஷயம் இருந்தது. ஒரு ஸ்டேடியம், அதுக்குள்ளே இருக்கிற ஒரு காதல், அரசியல், வலி... எல்லாம் இருந்தது. இயக்குநர் ஆதித்யா ரொம்பத் தெளிவா ஸ்கிரிப்ட் பண்ணியிருந்தார். இன்னும் டைட்டில் வைக்கல. தமிழ், தெலுங்குல பண்ணப்போறோம். கண்டிப்பா என் கரியர்ல இது முக்கியமான படமா இருக்கும்."  

"உடம்பை ஃபிட்டா வச்சிருக்கீங்களே... எப்படி?" 

"எப்போவும் வொர்க்-அவுட் பண்ணுவேன். எல்லாத் தொழிலுக்கும் ஒரு முதலீடு இருக்குமில்லையா... சினிமாவுக்கு என் முதலீடு என்னோட உடம்புதான். தவிர, நம்ம உடம்பை நாம பார்த்துக்கலைனா, வேற யாருங்க பார்த்துப்பாங்க? இந்த ஸ்போர்ட்ஸ் படத்துக்காக இப்போ கொஞ்சம் அதிகமா வொர்க் அவுட் பண்றேன். படத்துல கேரக்டராவே வாழ்ந்து ஆடியன்ஸை நம்பவைக்கிறதுதானே நம்ம வேலை."  

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

"பாலிவுட் இயக்குநர் நாகேஷ் குகுனூர் (Nagesh Kukunoor) இயக்கும் தெலுங்குப் படத்துல கமிட் ஆகியிருக்கீங்க. என்ன ஸ்பெஷல்?" 

"படத்தோட ஷூட்டிங் போயிட்டிருக்கு. எனக்கு ஜோடியா கீர்த்தி சுரேஷ் நடிக்கிறாங்க. இது ஒரு ஸ்போர்ட்ஸ் - ரொமான்டிக் - காமெடிப் படம். 'கன் ஷூட்டிங்' மெயின் கான்செஃப்ட்டா இருக்கும். என் கேரக்டர் ரொம்ப இன்ட்ரஸ்ட்டிங்கா இருந்ததுனால, ஓகே சொன்னேன். பெண்கள் சினிமா, ஒரு பெண் ஸ்போர்ட்ஸ் ஏரியாக்களுக்குப் போனா, நம்ம சமூகம் நெகட்டிவா ஏதாவது பேசும். அதைத் தாண்டி, ஒரு பெண் எப்படி வெளியே வர்றா... இதுதான் கதை. இந்தப் படம் மூலமா எல்லாப் பெண்களுக்கும் என்னைப் பிடிக்கும். எப்போவுமே பெண்களுக்குத் துணையா இருக்கிற கேரக்டர் கிடைச்சா, நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். 'ஈரம்' படத்துல ஹீரோயினை யாருமே நம்பாதப்போ, நான் நம்புவேன். 'யு டர்ன்' படத்துல சமந்தாவுக்கு எல்லா உதவிகளும் நான்தான் பண்ணுவேன்." 

"இதனாலதான் பெண்களை மையப்படுத்திய கதைகளில் நடிக்கிறீங்களா?"

"எனக்கு ஹீரோ படம், ஹீரோயின் படம்னு தனியா பிரிச்சுப் பார்க்கத் தெரியாது. அப்படிப் பார்க்கவும் மாட்டேன். கதையில என் கேரக்டர் பிடிச்சிருந்தா, கண்டிப்பா நடிப்பேன். நான் பண்ணாத ஒரு கேரக்டர் புதுசா கிடைச்சா, அது ஹீரோயின் படமா இருந்தாலும் எனக்கு ஓகேதான். ஹீரோயினை மையப்படுத்துற கதையில நடிக்கிறது தப்பான விஷயமா என்ன?" 

"மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வனை' மிஸ் பண்ணிட்டேனே!" - நடிகர் ஆதி

" 'அரவான்' தோல்விக்குப் பிறகு, அந்த உழைப்பை ஒரு கமர்ஷியல் படத்துக்குப் போட்டியிருக்கலாம்னு நினைச்சிருக்கீங்களா, இல்லை அந்தத் தோல்வி வேற ஏதாவது ஒரு மாற்றத்தை உங்களுக்குக் கொடுத்ததா?" 

"எனக்கு ரொம்பப் பிடிச்ச படம், 'அரவான்'. இந்தப் படம், தயாரிப்பாளருக்கு பணம் சம்பாதிச்சுக் கொடுக்கலைங்கிற வருத்தம் மட்டும்தான் எனக்கு இருக்கு. மத்தபடி, ஒரு நடிகனா இந்தப் படம் எனக்குப் பெருமைதான். இயக்குநர் வசந்தபாலன், நடிகர் பசுபதிகூட சேர்ந்து வொர்க் பண்ண அந்த அனுபவத்தை என்னால மறக்க முடியாது. 'குணா' படம் ஓடலைங்கிறதுக்காக, கமல் சார் அந்தப் படத்துல நடிச்சிருக்கக் கூடாதுனு சொல்ல முடியாதில்லையா... அப்படித்தான் 'அரவானும்.' இந்த மாதிரி படங்கள்லாம் எப்போவாவதுதான் வரும். அதனால, நடிகனா எனக்கு எந்த வருத்தமும் இல்லை."

"மிஸ் பண்ணிட்டோமேனு நினைக்கிற படம்?" 

"மணிரத்னம் சார் இயக்குற 'பொன்னியின் செல்வன்'ல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, கால்ஷீட் பிரச்னை காரணமா அந்தப் படத்துல கமிட் ஆக முடியல. ஏற்கெனவே கமிட் ஆன படங்களை இதுக்காக விடமுடியாதில்லையா. அதனால, தவிர்த்துட்டேன். ஆனா, இந்தப் படம் மிஸ்ஸானது வருத்தமா இருக்கு."