Published:Updated:

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

"குழந்தைகளை இப்போதே புகழுக்கு அடிமையாக்கிவிடுகிறோம். நம்மை போட்டோ எடுக்கிறார்கள், புகழ்கிறார்கள் என்று நினைக்கும்போது, அந்தக் குழந்தை தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறது. ஐந்து வருடம் கழித்து அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதைக் குழந்தையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' - 'மைம்' கோபி

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

"குழந்தைகளை இப்போதே புகழுக்கு அடிமையாக்கிவிடுகிறோம். நம்மை போட்டோ எடுக்கிறார்கள், புகழ்கிறார்கள் என்று நினைக்கும்போது, அந்தக் குழந்தை தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறது. ஐந்து வருடம் கழித்து அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், அதைக் குழந்தையால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை'' - 'மைம்' கோபி

Published:Updated:
"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

லையாளத்தில் 'பிக் பிரதர்ஸ்', யோகி பாபு நடிக்கும் 'காக்டெய்ல்' மற்றும் சமீபத்தில் வெளியான '100' போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் மைம் கோபி. இதுவரை 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவருடைய G MIME STUDIO-வில் இருந்த பலரும் தற்போது சினிமாவில் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்கள். 'நெடுநல்வாடை' ஹீரோ, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'திருமணம்' சீரியலின் ஹீரோ... எனப் பலரை உருவாக்கிய பெருமை கோபிக்கு உண்டு.  கோபியிடம் பேசினோம்

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

''இந்தத் துறையில் இன்னும் பல கலைஞர்களை என்னால உருவாக்க முடியும். 'மெட்ராஸ்', 'கதக்களி' போன்ற படங்கள் என்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. 'கபாலி'யில் ரஜினியுடன் நடித்தது மறக்கவே முடியாத அனுபவம். எங்கோ ஒரு இடத்தில் நாம் செய்யும் வேலையை நேசித்ததால்தான், ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்தால் அந்தந்தத் துறையில் நல்ல இடத்தில் இருக்கிறோம். நானும் அப்படித்தான். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் தொடர்ந்து இன்னும் ஜெயித்துக்கொண்டிருக்கும் காரணம் இதுதான்" எனப் பாசிட்டிவ் வார்த்தைகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

''ஏன் வில்லனாகவே நடிக்கிறீங்க?''

''வில்லன் கேரக்டர் மீது எனக்குத் தீராத ஆசை. ஹீரோவாக இருப்பதைவிட, வில்லனாக நடிக்கும்போது வாய்ப்புகளும் சரி, வரவேற்பும் சரி... அதிகமா இருக்கும். தவிர, எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவருக்கு ஒரு வில்லன் இருந்தே ஆகணும். அப்போதான் கதை சுவாரஸ்யமா இருக்கும். முக்கியமா, நல்லவனா நடிக்கிறது ஈஸி. கெட்டவனா நடிக்கிறதுதான் கஷ்டம். அதனால்தான் வில்லன் வாய்ப்புகளைத் தேர்ந்தெடுக்கிறேன்." 

''இத்தனை வருடங்களில் நீங்கள் சினிமாவில் கற்றுக்கொண்டது?"

''நிறைய மக்களைப் படிச்சிருக்கேனே! அதுவே பெரிய அனுபவம்தான். என்னைப் பொறுத்தவரை எந்த விஷயத்திலும் அதிக எதிர்பார்ப்புகளை வைக்கமாட்டேன். ஏனெனில், எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தைதான் ஏற்படுத்தும். ஆசைப்பட்டது கிடைக்காமல் போகும்போது கிடைக்கிற வலி கடுமையானது. 'நான் ஜெயிக்கலைன்னா, உழைக்கலை'ன்னு அர்த்தம். ஜெயித்திருப்பதால்தான், உங்களோடு பேசிக்கொண்டிருக்கிறேன். மத்தபடி, நான் நிறைய விஷயங்களில் ஏமாளியாக இருந்திருக்கிறேன். நிறைய தோல்விகளைத் தாண்டி வந்திருக்கிறேன்.''

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

''ஒரு கலைஞனுக்குத் தோல்வி பாடம்தானே?''

''ஒரு விஷயத்தை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நம் வாழ்க்கையில் எப்போதாவது வந்துபோவது, வெற்றி. எப்போதும் கூடவே இருப்பது, தோல்வி மட்டுமே! நாம் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்பட ஆரம்பிச்சுட்டோம். தோல்வியைப் பார்த்துக் கவலைப்பட ஆரம்பிச்சுட்டோம். தோல்விதான் அழகு. ஒரு ரூபாயில் சந்தோஷப்பட்ட நாம், இப்போது ஒரு லட்சம் ரூபாய் வரை செலவுகளை அதிகரித்திருக்கிறோம். அடிப்படை என்பதைத் தாண்டி, ஆடம்பரமே இப்போது அடிப்படை வசதிகளாகத் தோற்றம்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. ஆனால், அந்த ஒரு ரூபாய் மிட்டாயில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. வசதிகள் வர வர, பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. குழந்தைகளையும் இப்போது அப்படியே வளர்க்கிறோம். ஆனால், என் குழந்தையை அப்படி இல்லாமல், அக்கறை எடுத்துக்கொண்டு வளர்க்கிறேன்." 

''உங்கள் குழந்தை வளர்ப்பில் என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறீர்கள்?"

''நான் வளர்ந்தபோது மண்ணில் உருண்டு, புரண்டு விளையாடியிருக்கிறேன். கிராமத்தின் எல்லா வகையான விளையாட்டையும் விளையாடியிருக்கிறேன். அம்மாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அந்தக் கடிதம் சேரும்போது அவ்வளவு சந்தோஷமாக இருக்கும். இன்று அப்படியான சந்தோஷங்கள் இல்லை. மண்ணில் விளையாடுவதையே விட்டுவிட்டோம். கோடையில் குழந்தைகளுக்கு நடிப்பு, நடனம் போன்ற விஷயங்களைக் கற்றுக் கொடுக்கணும். என் மகன் வீட்டில் உள்ள எல்லாவற்றையும் உடைப்பான். தெரியாமல் செய்தால், மன்னிப்பு. தெரிந்து செய்தால், அது பெரிய தவறு எனச் சொல்லிக்கொடுப்பேன். 

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

குழந்தைகளை இப்போதே புகழுக்கு அடிமையாக்கிவிடுகிறோம். நம்மைப் போட்டோ எடுக்கிறார்கள், புகழ்கிறார்கள் என்று நினைக்கும்போது, அந்தக் குழந்தை தன்னைப் பெரிய ஆளாக நினைத்துக்கொள்கிறது. ஐந்து வருடம் கழித்து அந்தக் குழந்தையைக் கண்டுகொள்ளாமல் இருந்தால், குழந்தையால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதன் ஆழ்மனதில் தோல்வி, புறக்கணிப்பு என்ற விஷயம் பதிந்துவிடுகிறது. அதனால், என் மகனைப் புகழ் நிழல் படாமல் வளர்க்கிறேன்."

''உங்கள் நடிப்புப் பயிற்சியில் நீங்கள் கற்றுக்கொடுக்கும் முக்கியமான ஒரு விஷயம்?" 

"நடிப்பு என்பதையும் தாண்டி, இயல்பாகவே முகத்தில் சோகத்தையும் சந்தேகத்தையும் காண்பிக்கக் கூடாது. பேசும்போது இடையிடையே 'உம்', 'ஆங்', 'வந்து' என இழுத்துப் பேசினால் உங்கள் மீதான நம்பிக்கை குறையும். உங்களுடைய உறுதித் தன்மையும் குறையும். அதைத் தவிர்க்க வேண்டும். பல மனிதர்களைச் சந்தியுங்கள். நிறைய கேளுங்கள். நாம் யோசிப்பதை நீங்கள் சொல்லிவிடக் கூடாத அளவுக்கு இருக்க வேண்டும். 

"இதனாலதான் அஜித், விஜய், தனுஷ் இன்னும் ஜெயிக்கிறாங்க!" - மைம் கோபி ஷேரிங்ஸ்

உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கும் கொடுக்க வேண்டும். கொடுக்கக் கொடுக்க ஏமாளி என்பார்கள். சொல்லிட்டுப் போகட்டும். ஏமாற்றியவன் அங்கேயேதான் இருப்பான். ஏமாறுகிறவன் முன்னேறிக்கொண்டே இருப்பான். இழந்தது ஒருநாள் திரும்பி வந்தே தீரும். நான் நிறைய ஏமாந்தவன். ஆனால், நிறைய மக்களைச் சம்பாதித்திருக்கிறேன்."

"நிறைய அட்வைஸ்... ஆனால், கேட்க நல்லா இருக்கு!" 

"இன்னொன்னும் சொல்கிறேன். சந்தோஷத்தை முகத்தில் வச்சுக்கணும். சோகத்தை முதுகில் வச்சுக்கணும், சிந்தனையை மூளைக்குப் பின்னாடி வச்சுக்கணும், திறமையை முகத்துக்கு முன்னாடி வச்சுக்கணும், செயல்பாடுகளைக் கைகளில் வச்சுக்கணும், ஓட்டத்தைக் காலில் வச்சுக்கணும். அன்பை பெருசா வச்சுக்கணும். இதுதான் வாழ்க்கை'' எனச் சிரிக்கிறார் கோபி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism