Published:Updated:

``சந்திரகுமாரியில் `இருக்கேன்.. ஆனா, இல்ல'ங்கிற நிலைமைதான்!'' - உமா ரியாஸ் வருத்தம்

சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'சந்திரகுமாரி' சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருப்பவர் உமா ரியாஸ். ராதிகா சென்றப் பிறகு சீரியல் எப்படி இருக்கு என்பது குறித்து அவரிடம் பேசினோம். 

``சந்திரகுமாரியில் `இருக்கேன்.. ஆனா, இல்ல'ங்கிற நிலைமைதான்!'' - உமா ரியாஸ் வருத்தம்

``எனக்கே தெரியலைங்க. இது முழுக்க முழுக்க ராதிகாவால் உருவாக்கப்பட்ட சீரியல். ஆனால், இப்போ ராதிகாவே இல்லை எனும்போது அந்த சீரியல் எப்படி இருக்கும் என நீங்களே யோசித்துப் பார்க்கலாம். அவர் இருந்தவரை என்னுடைய நெகட்டிவ் ரோல் அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்போ அப்படி இல்லை. அவங்கப் போனப் பிறகு என்னை பெருசா கூப்பிடுறதே இல்லை. நான் அந்த சீரியலில் இருக்கேனா.. இல்லையானே தெரியலங்க. இன்னும் சொல்லப் போனால் அந்த சீரியல் இன்னும் எவ்வளவு நாள்களுக்குப் போகும்னே தெரியலைங்க. நான் ராதிகா இல்லாத அந்த இடத்தின் வெறுமையை உணருகிறேன்'' என்றவரிடம், பிக் பாஸ் சீசன் 3-ல் உங்கள் பெயரும் அடிபடுதே.. நீங்களும் போகப்போகிறீர்களா..?'' எனக் கேட்டதற்கு,

``சந்திரகுமாரியில் `இருக்கேன்.. ஆனா, இல்ல'ங்கிற நிலைமைதான்!'' - உமா ரியாஸ் வருத்தம்

``எல்லாரும் இப்படித்தாங்க கேட்குறாங்க. 'பிக் பாஸ் சிசன் 2'ல் என் மகன் ஷாரிக் கலந்துக்கிட்டன். அவனுடைய அம்மா என்பதால் இப்போ எனக்கு மவுசு கூடியிருக்குபோல. நிறையப் பேர் என்கிட்ட, 'பிக் பாஸ் 3'ல கலந்துக்கிறீங்களானு கேட்டுட்டே இருக்காங்க. கிட்டத்தட்டக் கடந்த 2 சீசன்கள் ஆரம்பிக்கும்போதும் இதே பேச்சுதான் ஓடுச்சு. உண்மையைச் சொல்லணும்னா என்னை யாரும் கூப்பிடவே இல்லைங்க.

``சந்திரகுமாரியில் `இருக்கேன்.. ஆனா, இல்ல'ங்கிற நிலைமைதான்!'' - உமா ரியாஸ் வருத்தம்

என்னைச் சுற்றி இருக்கவங்க 'நீங்க அந்த நிகழ்ச்சிக்குப் போனா சரியா இருக்கும். எப்படியும் நீங்`கதான் அந்த போட்டியில் ஜெயிப்பீங்க. அதற்குச் சரியான ஆள்தான் நீங்க' என என்னை பூஸ்ட் அப் பண்ணிட்டே இருக்காங்க. ஒருவேளை அப்படி கிடைச்சா சந்தோஷமா கலந்துகொள்வேன்'' என்கிறார் உமார் ரியாஸ்.