Published:Updated:

``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை!" - காயத்ரி ரகுராம்

``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை!" - காயத்ரி ரகுராம்

``என்னைப் பத்தின வதந்திகள் நின்றபாடில்லை. அதற்காக ஒருபோதும் நான் கவலைப்பட மாட்டேன்; கலங்கவும் மாட்டேன். என்னைப் பத்தி என் குடும்பத்தாருக்குத் தெரியும். அதனால, மத்தவங்களின் உண்மைத்தன்மையில்லா பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்."

டிகை காயத்ரி ரகுராம், சினிமா, பர்சனல், அரசியல் என எல்லா விஷயங்கள் குறித்தும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர். தமிழக பி.ஜே.பி-யிலிருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்திருப்பவர், தன் அக்காவுடனான பாசம் மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசினார். 

``என் சின்ன வயசுல பெற்றோர் இருவரும் நடன இயக்குநர்களா ரொம்ப பிஸியா இருந்தாங்க. அதனால என் சித்தி, தாத்தா, அக்கா ஆகியோர்தான் என்னை வளர்த்தாங்க. அக்கா எப்போதும் என்னோட இன்னொரு அம்மா மாதிரிதான் பாசம் காட்டுவாங்க. என் குளோஸ் ஃப்ரெண்டும் அவங்கதான். வேலை, பர்சனல்னு அவங்ககிட்ட இதுவரை நான் எந்த விஷயத்தையும் மறைச்சதில்லை. சினிமாவில் என்னைவிட அக்காதான் அதிகம் வேலை செய்திருக்காங்க. அப்பா பிஸியா இருந்தப்போ, அவரின் நிறைய பாடல்களுக்கு அக்கா உதவி நடன இயக்குநரா வேலை செய்திருக்காங்க. பிறகு `ஹேராம்', `லிட்டில் ஜான்' உட்பட சில படங்கள்ல நடன இயக்குநராகவும் வேலை செய்தாங்க. நடிக்க ஆசைப்பட்ட அக்கா, ஆஃப் தி ஸ்கிரீன்ல வேலை செய்தாங்க. இயக்குநரா ஆஃப் தி ஸ்கிரீன்ல வேலை செய்யணும்னு நினைச்ச நான், நடிகையானேன். அதனாலதான் வாழ்க்கை ஒரு வட்டம்னு சொல்லுவாங்கபோல (சிரிக்கிறார்).

``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை!" - காயத்ரி ரகுராம்

என் சின்ன வயசுலயே, அக்காவுக்குக் கல்யாணமாகி, அமெரிக்காவில் குடியேறிட்டாங்க. அக்காவைப் பிரியப்போறோம்னு நான் ரொம்பவே அழுதேன். அக்கா சுஜா, ஹாலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநரா இப்போ வேலை செய்றாங்க. ஹாலிவுட்டில் இயக்குநராகணும்னு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிடிருக்காங்க. தவிர, அமெரிக்காவில் ஒரு டான்ஸ் ஸ்கூலும் நடத்திட்டிருக்காங்க. அடிக்கடி அமெரிக்கா போய் அக்காவை மீட் பண்ணுவேன். அவங்களும் சென்னை வருவாங்க. அப்படித்தான் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா போயிருந்தேன். எங்க குடும்ப நண்பர்களின் ஃப்ரீ வெடிங் மற்றும் பிறந்தநாள் நிகழ்ச்சி மெக்சிகோவில் நடந்துச்சு. அதில் எங்க குடும்பத்தினர் எல்லோரும் கலந்துகிட்டோம். நீண்டநாள் கழிச்சு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீட் பண்ணிகிட்ட நிகழ்வு அது. அதனால நாங்க எல்லோருக்கும் பிங்க் கலர் டிரஸ் உடுத்தியிருந்தோம். அந்த காஸ்ட்யூம்ல எல்லோரும் போட்டோஷூட் பண்ணினோம். ரொம்பவே ஸ்பெஷலான தருணம் அது. பிறகு அமெரிக்கா போனோம்." 

``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை!" - காயத்ரி ரகுராம்

குறிப்பா, `பிக் பாஸ்' நிகழ்ச்சியில போட்டியாளரா கலந்துகிட்டப்போ, உண்மை என்னனே தெரியாம என்னைப் பலரும் தவறாப் பேசினாங்க. நான் நிகழ்ச்சியில இருந்து எலிமினேட்டாகி வீட்டுக்கு வர்றதைத் தெரிஞ்சுகிட்ட அக்கா, உடனே சென்னை வந்தாங்க. `யார் என்ன சொன்னா என்ன? நான் உன்னை நம்புறேன்'னு ஆறுதலா பேசிட்டு, அமெரிக்கா போனாங்க. இயக்குநரா என் முதல் படம், `யாதுமாகி நின்றாய்.' இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் என் அக்காதான்" என்கிறார் நெகிழ்ச்சியாக. 

தன் பர்சனல் வாழ்க்கை குறித்துப் பேசும் காயத்ரி ரகுராம், ``என்னைப் பத்தின வதந்திகள் நின்றபாடில்லை. அதற்காக ஒருபோதும் நான் கவலைப்பட மாட்டேன்; கலங்கவும் மாட்டேன். என்னைப் பத்தி என் குடும்பத்தாருக்குத் தெரியும். அதனால, மத்தவங்களின் உண்மைத்தன்மையில்லா பேச்சுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன். எனக்கு எப்போதும் பிஸியாவே இருக்கணும்ங்கிற எண்ணம் கிடையாது. `தலைவா', `வாண்டட்' ஆகிய படங்கள்ல மட்டும் உதவி இயக்குநரா வேலை செய்திருக்கேன். பிறகு, இப்போ நடிப்பு, டைரக்‌ஷன், டான்ஸ் கோரியோகிராபினு எனக்குப் பிடிச்சு வாய்ப்புகளில் மட்டும் பொறுமையா வேலை செய்றேன். வாழ்க்கையில பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் இப்போ எனக்கில்லை.  

``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை!" - காயத்ரி ரகுராம்

எனக்குக் கல்யாண வாழ்க்கை சரியா அமையலை. `அப்பா இருந்திருந்தா, இன்னொரு மண வாழ்க்கை பத்தி உரிய ஆலோசனை கொடுத்திருப்பார்'னு பலரும் சொல்வாங்க. அவர் இருந்தாலும், என் விருப்பப்படிதான் செயல்படுவார். இப்போ அம்மா அடிக்கடி, இன்னொரு கல்யாணம் பத்தி முடிவு பண்ணுனு சொல்றாங்க. ஆனா, எனக்கு இப்போதைக்கு எந்த கமிட்மென்ட்டும் இல்லாம இருக்கிறதுதான் பிடிச்சிருக்கு. இன்னும் கொஞ்சநாள் இப்படியே வாழணும்னு ஆசைப்படறேன். எனக்கு ஒரே எதிர்பார்ப்புதான். எனக்கு வரக்கூடிய வாழ்க்கைத் துணை, என் அப்பாவின் இடத்தைப் பூர்த்தி செய்பவராக இருக்கணும்னு ஆசைப்படறேன். அப்படியொருவர் கிடைச்சா, நிச்சயம் ஃபேமிலி லைஃப்ல கமிட்டாகிடுவேன்" என்று புன்னகைக்கிறார்.