Published:Updated:

தமிழ் சினிமா கவனத்துக்கு...

தமிழ் சினிமா கவனத்துக்கு...

ரீ-மேக் சீஸன் இது. எந்தப் படத்தை ரீ-மேக் செய்தால்... அதில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இவர்களிடம் கேட்டபோது...

தமிழ் சினிமா கவனத்துக்கு...
##~##

ட்சுமி, குடும்பத் தலைவி: ''எம்.ஜி.ஆர். நடிச்ச 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தைக் கார்த்தியைவெச்சு ரீ-மேக் செய்யணும். தொழில்நுட்ப வசதி இல்லாதப்பவே பிரமிப்பை ஏற்படுத்தின இந்தப் படத்தை, இப்ப ஷங்கர் டைரக்ட் பண்ணினால் பிரமாண்டத்துக்குப் பஞ்சம் இருக்காது. நாகேஷ் கேரக்டர்ல சந்தானம், லதா கேரக்டர்ல நயன்தாரா, நம்பியாரா ஆசிஷ் வித்யார்த்தி, அசோகனா பிரகாஷ்ராஜ் நடிச்சா படம் உண்மையாவே உலகத்தைச் சுத்தும்!''

தமிழ் சினிமா கவனத்துக்கு...

தம்பி ராமையா, நடிகர்: ''இளம் ரத்தம் ஓடுறப்ப தகாத வஸ்துக்கள் சகலத்தையும் கூட சேர்த்துக்கிட்ட ஒருத்தனை ரத்தம் சுண்டின பிறகு யாருமே கிட்டே சேர்க்க மாட்டாங்கனு சொன்ன 'ரத்தக் கண்ணீர்’தான் என் சாய்ஸ். இதில் ராதாரவியின் அனுமதி, ஆசீர்வாதத்தோட எம்.ஆர்.ராதா கேரக்டர்ல நடிக்க எனக்கு ஆசை. இளையராஜா சார் இசையில் இதை பிரபு சாலமன் இயக்கணும்!''

வித்யாதரன், தனியார் நிறுவன ஊழியர்: ''முழு நீள நகைச்சுவைப் படமான 'குரு சிஷ்ய’னை ரீ-மேக் செய்யணும். ரஜினி கேரக்டர்ல ஆர்யா, பிரபு கேரக்டர்ல சந்தானம். இதை யுவன் இசையில் விஷ்ணுவர்தன் இயக்கணும். சந்தானம் கலாய் கலாய்னு கலாய்ச்சா படம் காமெடியில் அள்ளுமே!''

ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர்: ''நம்ம சாய்ஸ் 'பாட்ஷா’தான் சார். ரஜினி சார் கேரக்டர்ல விஜய் நடிக்க, ஏ.எல்.விஜய் இயக்கணும். மியூஸிக் வேற யாரு... நானேதான்.  'தங்க மகன் இன்று சிங்க நடை போட்டு அருகில் அருகில் வந்தான்’, 'ஸ்டைலு ஸ்டைலுதான்’ டைப்ல ஹிட் பாடல்கள் தர நான் ரெடி!''

ஆர்த்தி, நகைச்சுவை நடிகை: '' 'பாசமலர்’ படத்தை டி.ஆர் இயக்கி, இசையமைச்சு அவரே அண்ணனா நடிச்சு ரீ-மேக் செய்யணும். ஏன்னா 'தங்கச்சி... தங்கச்சி’னு பாசமாப் பேசி நடிப்பதில் அவரு டாக்டரேட் வாங்கினவர். தலைப்பை மட்டும் 'கொட்டாங்குச்சி... தங்கச்சி’னு லைட்டா மாத்தி மும்தாஜைத் தங்கச்சியா நடிக்கவைக்கலாம்!''

-க.நாகப்பன்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன், ப.சரவணகுமார்

அடுத்த கட்டுரைக்கு