பிரீமியம் ஸ்டோரி

 உள்ளே வெளியே...

வெளியில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு முகம் காட்டும் சரத், உள்ளுக்குள் தி.மு.க. சேனலுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார். படத்தை வாங்கி வெளியிட்டதில் ஏற்பட்ட நஷ்டம் குறித்து திரையரங்க உரிமையாளர்களுக்கும் சேனலுக்குமான குஸ்திக்கு நாட்டாமை செய்து தீர்த்து வைத்தாராம். 'எந்திரன்’ நஷ்டஈடு விவகாரத்தையும் சிறப்பாக முடித்து விட்டாராம்.

வரிவிலக்கு வாங்கலியோ..!

வரிவிலக்கு அளிப்பதற்காக ஒரு குழு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழு பார்த்துத்தான், 'நண்பன்’, 'வேட்டை’ படங்களுக்கு வரிவிலக்கு அளித்தது. பொதுவாக பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே படத்துக்கான வரிவிலக்கைப் பெறுவார்கள். ஆனால், 'அரவான்’ படத்துக்கு எப்படியோ முன்கூட்டியே வரிவிலக்கு வாங்கி விட்டார்களாம்.

மிஸ்டர் மியாவ்

புவர் ரிச்சா...

'மயக்கம் என்ன’ 'ஒஸ்தி’ ஹீரோயின் ரிச்சாவை ஒப்பந்தம் செய்வதற்காக வரிசை கட்டி நின்றது இயக்குனர்கள் கூட்டம். சம்பளம் மற்றும் கண்டிஷன்களைக் கேட்டு அனைவரும் சிதறிவிட்டார்களாம். அதற்குப்பின், யாருமே எட்டிப் பார்க்கவில்லை. அதனால், கொல்கத்தாவுக்கு ரிட்டர்ன் போன ரிச்சா, பெங்காலி மொழியில் ரீமேக் ஆகும் 'சிறுத்தை’யில் சொற்ப சம்பளம் வாங்கிக்கொண்டு நடித்து வருகிறராம். 'பேர் ரிச்சா இருக்கு... ஆனா புவர் கேர்ள்...’ என்கிறார்கள் இயக்குனர்கள்.

அனுஷ்காவின் அன்பு...

அனுஷ்காவுக்கு மேக்கப் போடுகிறவர், திருநங்கை நிக்கி.  இவர் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான், தான் சினிமாவில் உச்சத்துக்கு வந்ததாக நம்புகிறார் அனுஷ். அதனால் அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் நிக்கியிடம்தான் குடும்ப விவகாரம் குறித்தும் ஆலோசனை நடத்துகிறாராம்.  

குஷ்பூ தங்கச்சி...

ஹன்சிகா மோத்வானி நிஜமாவே அப்பாவியா... இல்லை நக்கல் பார்ட்டியா எனத் தெரியவில்லை.  பிரபுதேவா - நயன்தாரா காதல் குறித்து,  'பிரபுவும் நயனும் அண்ணன் தங்கச்சி மாதிரி. லவ்வுன்னு தப்புத் தப்பா சொல்லக் கூடாது...’ என்று தனது ட்விட்டரில் கமென்ட் அடித்து இருக்கிறார்!  

மிஸ்டர் மியாவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு