##~## |
• நயன்தாரா பிரிவால் நொந்துபோன பிரபுதேவா, தனிமை தேடி அயல்நாட்டுக்குப் பறந்து விட்டாராம். நண்பர்கள் போன் செய்தும், எஸ்.எம்.எஸ். அனுப்பியும் நோ ரெஸ்பான்ஸ்.
• சட்டசபையில் விஜயகாந்த் நடத்திய அதிரடி மேளாவுக்கு, கோலிவுட்டில் கும்ப மரியாதை. கேப்டனுக்கு போன் செய்து நீண்ட நேரம் வாழ்த்து மழை பொழிந்தாராம் குஷ்பூ.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• உலகையே உலுக்கிய 'டைட்டானிக்’ படம், 3டி எஃபெக்ட்டில் தயார் ஆகிகிறது. சென்னை தி.நகரில் இருக்கும் அதிநவீன தொழில்நுட்பக் கூடத்தில்தான் இந்தப் பணி நடக்கிறது என்பதுதான் முக்கியத் தகவல்.

• 'வடசென்னை’ படத்தில் விலைமாது கேரக்டரில் நடிக்கிறார் ஆன்ட்ரியா. நாயகன் சிம்புவைவிட, கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் ரோலை ஆன்ட்ரியாவுக்கு கொடுத்து இருக்கிறார், இயக்குனர் வெற்றி மாறன்.
• அரிராஜன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் உருவாகும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயின் இரண்டுமே அவர்தான் என்கிற அள வுக்கு முக்கிய கேரக்டர் நமீதாவுக்கு! கவர்ச்சிக்கு கல்தா கொடுத்துவிட்டு டிஷ்யூம் டிஷ்யூம் போடுகி றாராம்!
• '3’ படத்தில் இடம்பெறும் 'கொலவெறி...’ பாடல் காட்சிக்கு ஹீரோ ஹோண்டா, பூஸ்ட் விளம்பரங்களைப் பயன்படுத்தி, கோடிகளைக் கறந்துவிட்டார்களாம். படத்தின் பட்ஜெட்டைவிட, சாட்டிலைட் உரிமை டபுள் மடங்காம்.