கோடம்பாக்கம் முதல் ஜப்பான் வரை எதிர்பார்ப்பைக் கிளப்பி யிருக்கும்,
'கோச்சடையான்’ டீமில் பேசினோம்.
• நின்றுபோனதாக நீட்டி முழக்கப்படும் 'ராணா’ படத்தின் முதல் பாகம்தான், 'கோச்சடையான்’.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
• 'எந்திரன்’ படத்தைவிட அதிநவீனத் தொழில்நுட்பத்தில் தயாராகும் இந்தப் படத்தில், அப்பா, மகன் என்று இரண்டு வேடங்களில் வருகிறார் ரஜினி.
• தந்தைக்கு ஜோடி ஷோபனா, தனயனுக்கு தீபிகா படுகோன்.

• தங்கை கேரக்டரில் நடிக்க சிநேகாவிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இடையில் என்ன நடந்ததோ, இப்போது 'பொம்மலாட்டம்’ ருக்மணி வருகிறார். ருக்குவுக்கு ஜோடி... ஆதி.
• இறந்துபோன நடிகரை நடிக்கவைக்கும் விஞ்ஞான முயற்சியை படத்தில் செய்கிறார்கள். ஆம், தொழில்நுட்பத்தின் உதவியால், நாகேஷ் நடிக்கிறார். மகன் ரஜினியுடன், 'காதலிக்க நேரமில்லை’ ஒல்லி நாகேஷூம், அப்பா ரஜினியுடன் 'பஞ்சதந்திரம்’ நாகேஷூம் நடிக்கிறார்கள்.
• வில்லன் ரோலுக்கும் மறைந்த இந்தி நடிகர் அம்ரீஷ்பூரியை இதேபோன்று நடிக்கவைக்க நினைத்தார்களாம். அந்த வேடத்துக்கு இப்போது ஒப்பந்தம் ஆகி இருப்பது ஜாக்கி ஷெராஃப்.
• சரித்திர வசனங்களை கே.எஸ்.ரவிக்குமார் எழுதி இருக்கிறார். டயலாக் டெலிவரி சரியாக வருமா என்பதில் ரஜினிக்குக் குழப்பம். அதனால், டப்பிங் ஸ்டுடியோ வந்த ரஜினி, வரலாற்று வசனங்களை பல்வேறு மாடலில் பேசிக்காட்டி, திருப்தியான ஒன்றைத் தேர்வு செய்திருக்கிறார்.
• மார்ச் 19-ம் தேதி லண்டனில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

##~## |