ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: தனுஷுக்கு சம்பளம் இல்லை!

மிஸ்டர் மியாவ்: தனுஷுக்கு சம்பளம் இல்லை!

• அம்மாவின் ஆட்சி வந்ததில் இருந்து மௌனம் காத்த மதுரைத் தம்பி தயாநிதி அழகிரி, மீண்டும் படத்தயாரிப்பில் இறங்கி விட்டார். சித்தார்த் ஹீரோவாக நடிக்கும், 'தேசிய நெடுஞ்சாலை’க்கு வெற்றிமாறன் ஸ்கிரிப்ட் எழுத, அவரது உதவியாளர் மணி படத்தை இயக்குகிறார்.

• விஜயகாந்த் நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை’ படத்தை ரீ-மேக் செய்ய இருக்கிறார் நடிகர் விஜய். ஹீரோவாக பிரபு மகன் விக்ரம் பிரபு நடிக்க... நாயகியாகிறார் ராதா மகள் கார்த்திகா.

• செல்வராகவன் இயக்கும் 'இரண்டாம் உலகம்’ படத்தில் அனுஷ்கா முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறார். குடும்பத் தலைவி, அதிரடி அழகி என்று இரட்டை அசத்தலாம்.

மிஸ்டர் மியாவ்: தனுஷுக்கு சம்பளம் இல்லை!
##~##

'7ஆம் அறிவு’ படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜானியின் கேரக்டர் பெரிதாகப் பேசப்பட்டது. அதே போன்று, மலையாள நடிகர் ஜெயராமுக்கும் 'துப்பாக்கி’ படத்தில் அசத்தலான கேரக்டராம். இதில், துப்பாக்கி தூக்கும் ராணுவத் தளபதியாக நடிக்கிறார் விஜய்.

• ஒரே பாடலில் உச்சத்துக்குப் போய்விட்ட '3’ படத்தை 70 கோடிக்குக் கேட்பதைப் பார்த்து கோடம்பாக்கமே வாய் பிளந்து நிற்கிறது. ஆனால், இன்னமும் ஹீரோ தனுஷ§க்கும் டைரக்டர் ஐஸ்வர்யாவுக்கும் சல்லிக்காசுகூட சம்பளம் தரவில்லையாம் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜா.

• 'நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்கு இசை அமைக்க முதலில் ஏ.ஆர்.ரஹ்மானை நாடினாராம் கவுதம் மேனன். சம்பள பேரம் படியாத காரணத்தால்தான், இளையராஜாவைத் தேடிப் போனாராம்! 

நீ நடந்தால்...

''மறைந்த புட்டபர்த்தி சாய்பாபாவைப் பார்க்க எல்லோருமே ஆசைப்படுவாங்க. ஆனா, அந்த பாபாவே சிவாஜியை சந்திக்க ஆசைப்பட்டார். அவரைப் பார்க்கபோன என்கிட்டே சிவாஜியை அழைச்சுட்டு வரச்சொன்னார். சிவாஜியிடம் சொன்னதும் சந்தோஷமாகக் கிளம்பினார்.

மிஸ்டர் மியாவ்: தனுஷுக்கு சம்பளம் இல்லை!

பாபாவை தரிசிக்க ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு 50 அடி தூரம். இந்த வழியில்தான் முக்கியமான வி.வி.ஐ.பி-கள் வருவாங்க. அடுத்தது 150 அடி தூரம். சிவாஜியை இரண்டாவது வழியா வரச்சொன்னார். எனக்கும் சிவாஜிக்கும் என்னவோ போலாச்சு. வெளியே காட்டிக்காம அந்த வழியில் சிவாஜி நடந்துபோனார். அருகில் வந்ததும் பாபா சிவாஜியைக் கட்டிப் பிடிச்சார். 'உன்னோட நடையைப் பார்க்கணும்னு ஆசை... அதான் இந்த வழியில் வரச்சொன்னேன். தப்பா நெனச்சுக்காதீங்க...’ என்று சொன்ன பாபாவைப் பார்த்து கண் கலங்கிவிட்டார் சிவாஜி'' என்று 'கர்ணன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ஃப்ளாஷ்பேக் பேசினார், சிவாஜியின் நெருங்கிய நண்பர் வி.என்.சிதம்பரம்.