ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!

மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!

##~##

'பருத்தி வீரன்’ பிரச்னை இப்போதைக்கு தீராதோ? 'பையா’, 'நான் மகான் அல்ல’ படங்களின் தெலுங்கு ரீமேக் சக்சஸ் ஆனதால், கார்த்திக்கு தெலுங்கில் செம மாஸ். இந்த நேரத்தில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவால் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 'பருத்தி வீரன்’ வெளிவர இருக்கிறது. 'கதை, ஸ்கிரிப்ட் என்னுடையது. என் அனுமதி இல்லாமல், எனக்கு ராயல்டி தராமல் ஏமாற்றிவிட்டார்கள்’ என்று போலீஸ் கமிஷனர் ஆபீஸில் அமீர் புகார் கொடுத்துவிட்டார். ஞானவேல் ராஜாவோ, '''பருத்தி வீரன்’ படத்தை  ரீ-மேக் செய்தால்தான் அமீரிடம் அனுமதி கேட்க வேண்டும். ஆனால், படங்களை டப்பிங் செய்வதற்கு தயாரிப்பாளருக்கு முழு உரிமை உண்டு. பருத்திவீரனை, மலையாளம், கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியிடுவேன். திட்டமிட்ட தேதியில் 'பருத்திவீரன்’ ஆந்திராவில் வெளிவருவான். என்மீது புகார் கொடுத்த அமீர் மீது மானநஷ்ட வழக்குத் தொடருவேன்'' என்று டென்ஷன் ஆகிறார்.

மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!

• 'கோச்சடையான்’ படப்பிடிப்பே இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்குள் அடுத்த படத்துக்கான கதையை ஒரு டைரக்டரிடம் கேட்டு, ஓகே சொல்லிவிட்டாராம் ரஜினி. ஈராஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தில், 'ராணா’ படத்துக்காக அறிவிக்கப்பட்ட அத்தனை டெக்னீஷியன்களும் இடம் பெறுகிறார்கள். டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் மிஸ்ஸிங். வித்தியாசமான அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கப்போவது... கே.வி.ஆனந்த்! 

• 'துப்பாக்கி’யில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாட்டும் பாடிவிட்டார் விஜய். பாடல் வரிகளை வார்த்துக் கோர்த்து வழங்கியவர், வைரமுத்து வாரிசு கார்க்கி!   

• கன்னட நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் கடத்தியபோது, தப்பி வந்த நாகப்பாவை ஞாபகம் இருக்கிறதா? அவர் இப்போது, 'வனயுத்தம்’ படத்தில் அர்ஜூனோடு நடித்து வருகிறார். 'நான் எல்லாம் சினிமாவுலதான் ஆக்ஷன் கிங். நடு ராத்திரியில் வீரப்பனிடம் இருந்து தப்பிச்ச நாகப்பாதான் நிஜ ஆக்ஷன் கிங்...’ என்று சிலாகிக்கிறார் அர்ஜூன்.

மிஸ்டர் மியாவ்: பற்றி எரியும் பருத்தி!