##~## |
• ஏற்கெனவே, 'மன்னன்’ படத்தில் 'அடிக்குது குளிரு...’ பாட்டைப் பாடி அசத்தியவர்தான் ரஜினி. அதன் பிறகு கடந்த 11-ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்டுடியோவில், 'கோச்சடையான்’ படத்துக்காக ஒரு பாடல் பாடி இருக்கிறார். 'ராஜ ராஜ சோழன்’ படத்தில் 'தென்றலோடு உடன் பிறந்தாள்...’ பாடலை சிவாஜி பாடியது போல் வசன நடையோடு பாடி இருக்கிறார். இந்த வரலாற்றுக் காலப் பாடலை எழுதியவர் வைரமுத்து!
• விரைவில் நடக்க இருக்கும் பெர்லின் திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம்’ படத்தை வெளியிடப்போகிறார், கமல். அதற்காக இரவு, பகல் பாராமல் இரண்டு இடங்களில் படப்பிடிப்பை நடத்துகிறார். சென்னையில் நடந்துவரும் படப்பிடிப்பின் பிரதானப் பொறுப்பை நாசரும், மும்பையில் நடக்கும் ஷூட்டிங்கை கமலும் கவனித்து வருகிறார்கள்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• லேட்டஸ்ட் என்கவுன்டர், நில அபகரிப்பு நிகழ்வுகளை தனது, 'கந்தா’வில் படமாக்கி இருக்கிறார் பாபு கே.விஸ்வநாத். ரவுடிகளை ஓட ஓட விரட்டி போட்டுத் தள்ளும் போலீஸ் அதிகாரி வேஷத்தில் ஒவியர் அரஸ் நடித்து இருக்கிறார். 'காவலன்’ படத்தில் செகன்ட் ஹீரோயினாக நடித்த மித்ரா, இந்தப் படத்தின் நாயகி.
• 'சார்... என்மேல யாரோ கொலவெறியாத் திரியுறாங்க. உங்களுக்குக் கோடி கும்பிடு போடுறேன். நான் கோடி ரூபாய் கேட்கவே இல்லை சார்...’ என்று புலம்புகிறார் அனிருத். அடுத்து ஓர் இந்திப் படத்துக்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.
• நீண்ட காலமாய் டைரக்ஷனுக்கு ஹாலிடே விட்டிருந்த எஸ்.ஜே.சூர்யா மீண்டும் இயக்கத்தில் இறங்கிவிட்டார். நான்வெஜ் நர்த்தனமாடும் கிளுகிளு கதை ஒன்றை தயார் செய்து, அரபுக் குதிரை லட்சுமிராயை செலக்ட் செய்து இருக்கிறார்.
• சென்ற டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்த நாளை, ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் விமரிசையாகக் கொண்டாடினார்கள். சமீபத்தில் அந்த வீடியோவைப் பார்த்த ரஜினி கண் கலங்கிவிட்டாராம். உடனே விழா நடத்திய ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களை ராகவேந்திரா மண்டபத்துக்கு அழைத்து மனம்விட்டுப் பேசி இருக்கிறார். 'அதென்னப்பா... நான் அரசியலுக்கு வரணும்னு பேசும்போது மட்டும் கை தட்டுறீங்க... மத்த நேரம் எல்லாம் மௌனமா இருக்கீங்க...’ என்று கேள்வி கேட்டாராம்.
