Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

• ஆக்ஷன், அடிதடிகளை மூட்டை கட்டிவைத்துவிட்டு, அழுமூஞ்சி அப்பாவாக 'பிரசாத்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய பையனுக்கு அப்பாவாக நடித்து இருக்கிறார் அர்ஜுன். தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ரிலீஸாகப்போகும் படத்தை முன்கூட்டியே வெளிநாட்டுத் திரைப்பட விழாவில் திரையிட்டு இருக்கிறார்கள். மொழி தெரியாத வெள்ளையர்கள் படத்தைப் பார்த்து க்ளைமாக்ஸில் எழுந்து நின்று கைதட்ட, அர்ஜுன் கண் கலங்கிவிட்டாராம். 

மிஸ்டர் மியாவ்

• படப்பிடிப்புக்கு வராமல் தண்ணி காட்டுவதில் தமிழ் ஹீரோக்களை விஞ்சிவிட்டார் அனுஷ்கா. 'தாண்டவம்’ படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார். கடந்த வாரம் முழுக்க இந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்து இருந்தார். விக்ரம் மற்றும் படக் குழுவினர் அனுஷ்காவுக்காக நீண்ண்ண்ட நேரம் காத்திருக்க... அம்மணி வரவே இல்லை. செல்போனும் ஸ்விட்ச்ஆஃப். விசாரித்தபோது, ஹைதராபாதில் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தது தெரியவந்ததாம். விஷயம் இப்போது விவகாரமாகிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• 'எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஒப்பந்தமான விமல், 'டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வேணவே வேணாம்’ என்று எகிறினார். இப்போது 'மெரினா’வுக்குப் பிறகு பாண்டிராஜ் தயாரிக்கும் படத்தில் இரண்டு நாயகர்களாம். ஒருவர் சிவ கார்த்திகேயன், இன்னொருவர் விமல். முருகதாஸுக்கு டிமிக்கி கொடுத்த விமல், பாண்டி முன்னால் பவ்யமாகிவிட்டாராம்!

மிஸ்டர் மியாவ்
##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism