Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்

கோர்ட்டில் ரேவதி?

நடிகை ரேவதி கோர்ட்டுக்கு வரப்போவதாக மீடியாக்களில் கடந்த புதன்கிழமை திடீர் வதந்தி. ஆனால் அவர் வரவில்லை. ரேவதி - சுரேஷ் மேனன் ஆகிய இருவரும்தான் பிரிந்து வாழ்கிறார்களே என்று விசாரித்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''பத்து வருடங்களுக்கு முன், ரேவதி - சுரேஷ்மேனன் ஆகிய இருவரும் பிரிந்து வாழத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் கோர்ட்டுக்குப் போகவே இல்லை. தனித்தனியாக வாழ்ந்தார்கள். ரேவதியை சமூக சேவகியாக மிளிர வைத்ததும் சுரேஷ்தான். ரேவதி டைரக்ஷன் செய்த, 'மித்ர மை ஃப்ரெண்ட்’ படத்தின் தயாரிப்பாளரும் சுரேஷ்தான். இன்னிக்கு ரேவதி எங்கே இருக்காங்க... என்ன பண்றாங்கன்னு எல்லாமே சுரேஷூக்கு அத்துப்படி.  இப்போதுகூட சுரேஷ் வீட்டு டேபிளில் இருக்கும் போட்டோவில் ரேவதி சிரித்துக்கொண்டே இருக்கிறார்'' என்று விளக்கம் கொடுத்தார்கள்.

மிஸ்டர் மியாவ்

இந்தத் திடீர் தகவலுக்கு என்ன காரணம்?

''சுரேஷின் தம்பி சதீஷ் மேனனுக்கு ஆஷா என்பவருடன் கடந்த 2000-ல் திருமணம் நடந்தது. 2004-ல் இருவரும் பிரிந்து விட்டனர்.   அந்த ஆஷாதான் இப்போது கோர்ட் படி ஏறி இருக்கிறார். இதைவைத்துத்தான் ரேவதி கோர்ட்டுக்கு வருவதாக செய்தியைக் கிளப்பி விட்டார்கள். (ரேவதியின் இயற்பெயர் ஆஷா!)  

 அலறும் அல்போன்சா!

##~##

'மச்சான் மீசை வீச்சருவா... மச்சினி உன்னை ஏய்ச்சுடுவா...’ என்ற கருத்தாழமிக்க பாடலுக்கு ஆடி, ரசிகர்களை மகிழ்வித்தவர் அல்போன்சா. சமீபத்தில் அவரது காதலன் வினோத்குமார் இறந்து போன விவகாரத்தை, 'சந்தேகத்துக்கு இடம் இல்லாத 174 கேஸ். அதாவது திட்டமிட்ட தற்கொலை’ என்று ஃபைலைக் குளோஸ் செய்து விட்டது காவல்துறை. ஆனாலும், வினோத் குமாரின் பெற்றோர் அல்போன்சாவை விடுவதாக இல்லை. எப்படியாவது அல்போன்சாவை போலீஸில் சிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வைக்கிறார்கள். 'பெரிய்ய பெரிய்ய ஆளுங்களையே வீடு பூந்து போலீஸ் அரெஸ்ட் பண்ணுது. அவங்களுக்கு முன்னாடி நான் எம்மாத்திரம்? திடீர்னு போலீஸ் என்னைக் கைது செஞ்சுட்டா என்ன பண்றது?’ என்று உறவினர்களிடமும் நண்பர்களிடம் பீதி வழிய ஆலோசனை கேட்டு வருகிறார் அல்போன்சா.

 ஆவேசவிந்தியா!

திருப்பதியைப் பூர்வீகமாகக்கொண்ட விந்தியா, சினிமாவில் பிரபலமாக இருந்தபோது, பானுப்ரியாவின் சகோதரர் கோபி கிருஷ்ணாவைக் காதலித்து கல்யாணமும் செய்து கொண்டார். திருமணம் நடந்த மூன்றாம் நாளே தம்பதிக்கு இடையே தகராறு. இருவரும் பிரிந்து தி.நகர் பகுதியில் தனித்தனி வீடுகளில் வசித்தார்கள். விவாகரத்து கேட்டு இருவரும் குடும்ப நல கோர்ட்டுக்குச் சென்றனர். 'விந்தியா என்னை ஏமாற்றி விட்டார்’ என்று கணவரும், 'கோபிதான் என்னை ஏமாற்றினார். அவரிடம் இருந்து நஷ்டஈடு வாங்கித்தர வேண்டும்’ என்று மனைவியும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள். அதன் பிறகு, அ.தி.மு.க-வில் ஐக்கியம் ஆனார் விந்தியா. சமீபத்தில் நடந்த சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் கூட அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்தார். காலம் இருவரின் கோபத்தையும் குறைத்து விட்டது. அதனால் நஷ்டஈடு, ஜீவனாம்சம் எதுவும் இன்றி பரஸ்பரம் பிரிந்துகொள்ள இருவரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இந்த வழக்கில், குடும்ப நல கோர்ட் வரும் செப்டம்பர் மாதம் இறுதித் தீர்ப்பு அளிக்க இருக்கிறது!

 டார்ச்சர் பாபு?

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவருக்கும் நெருங்கிய நண்பராக நடித்த பெருமை சரத்பாபுவுக்கு உண்டு. முதலில் நடிகை ரமா பிரபாவை திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு ஏற்பட, இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். அதன்பிறகு, எம்.என்.நம்பியார் மகள் சினேகலதாவுடன் சினேகம் ஏற்பட்டது. அந்த நட்பு, காதலாகி, கசிந்துருகி கல்யாணத்தில் முடிந்தது. இப்போது, 'சரத்பாபு தினமும் டார்ச்சர் செய்கிறார். எனக்கு அவரிடம் இருந்து விவாகரத்தும், அவருடைய சொத்தில் பங்கும் வேண்டும்’ என்று குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார் சினேகலதா. கடந்த 29-ம் தேதி கோர்ட்டுக்கு வந்த சரத்பாபுவுடன் இரண்டு மணி நேரம் கவுன்சிலிங் நடந்தது. அடுத்து, சினேகலதாவுக்கும் கவுன்சிலிங். அதன் பிறகு கோர்ட் முடிவு தெரிவிக்குமாம்!

மிஸ்டர் மியாவ்