Published:Updated:

'தலைவா' படம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

'தலைவா' படம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!
'தலைவா' படம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

'தலைவா' படம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

'தலைவா' படம்: நடிகர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை: 'தலைவா' படம் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய படம். இது அரசியல் சம்பந்தப்பட்ட படமல்ல என நடிகர் விஜய் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தலைவா படம் குழந்தைகளோடு, குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கக்கூடிய ஜனரஞ்சக படம். லவ், ஆக்க்ஷன், காமெடி என அனைத்து அம்சங்களையும் கொண்டதுதான் தலைவா படம்.

யாரோ சிலர் இது அரசியல் சம்பந்தப்பட்ட படம் என்று வதந்தி பரப்பி வருகின்றனர். அந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். தலைவா, துளிகூட அரசியல் கலக்காத சமூகப்படம்' எனக் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்த "தலைவா" படம் வெளியாக உள்ள 9 தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து நடிகர் விஜய் இந்த அறிக்கையை விடுத்துள்ளார்.

இதேபோல், தலைவா பட இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் சந்திர பிரகாஷ் ஜெயின் ஆகியோரும் 'இது அரசியல் படம் அல்ல' என தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு