Published:Updated:

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

ஜாம்பவான் இயக்குனர் ஸ்ரீதர் பெயரையே, தன்னு டைய படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளார் 'தேவி ஸ்ரீதேவி’ சதீஷ். சித்தார்த், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி நடித்த 'ஓ மை ஃப்ரெண்ட்’ திரைப்படம் தெலுங்கில் சக்கைபோடு போட்டது. அதுதான்,  தமிழில் 'ஸ்ரீதர்’ என வெளிவரப் போகிறது! 

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

கே.வி.ஆனந்த் படங்களின் கதை கர்த்தா சுபா, இப்போது ஷங்கரின் பாக்கெட்டில்!  பிரமாண்டமான அதிரடி ஆக்ஷன் கதை, பக்காவாக முடிந்து ஷங்கர் கையில் சரண்டராகிவிட்டதாம். இப்போது, குழப்பத்தில் தவிப்பது ஷங்கர்தான். தமிழ், தெலுங்கில் இயக்க இருக்கும் படத்துக்கு முதலில் விக்ரமைத் தேர்வு செய்திருந்தார். ஆந்திராவில் சூர்யாவுக்கு மார்க்கெட் வேல்யூ ஜாஸ்தி என்று சொல்லப்படவே, இப்போது சூர்யா வேட்டை நடக்கிறது.

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!
மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

'எனக்கும் சிம்புவுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. நான் தெலுங்கில் பிஸி, அதனால்தான் கால்ஷீட் இல்லை’ என்று, நயன்தாரா கைவிரித்தது பம்மாத்துதானாம். சிம்புவுக்கு நோ சொன்ன தாரா, இப்போது விஷால் நடிக்கும் தமிழ்ப் படத்துக்கு கால்ஷீட் தேதிகளை வாரி வழங்கி இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!

சென்னை அபிராமபுரத்தில் இருக்கும் தனது அலுவலகத்தின் தரைத் தளத்தை பளீரென மாற்றி இருக்கிறார், அஜீத். ரிமோட் ஃப்ளைட், பில்லியர்ட்ஸ், ஜிம் என்று கலகல கேம்ஸ் ஸ்பாட்டாக மாறியுள்ள பெர்சனல் அறைக்குள் நான்கு நண்பர்களுக்கு மட்டுமே அனுமதியாம்.

எஸ்.ஏ.சி. எரிச்சல்!

##~##

அப்படியும் இப்படியுமாய் இழுபட்டுக்கிடந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் ஃபெப்ஸி பிரச்னையில், திடீரென தமிழக அரசு தலையிட்டு வெள்ளைக் கொடி பறக்க விட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத எஸ்.ஏ.சந்திரசேகரன், தாணு, தேனப்பன் தவிர மற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார்கள்.

அதைத் தொடர்ந்து கவுன்சிலுக்கு வந்த கேயார் தரப்பு, 'எஸ்.ஏ.சந்திரசேகரன் தன்னிச்சையாக செயல்பட்டதாகச் சொல்லி’ இப்ராகிம் ராவுத்தரை சங்கத் தலைவராக அறிவித்தது. ஆனால், 'நான் தலைவர் பதவியில் இருந்து விலக மாட்டேன்... பொதுக் குழு கூடட்டும்’ என்று கொந்தளிக்கிறார் சந்திரசேகரன். அவரிடம், 'நீங்கள் ரகசியமாக விஜயகாந்தைச் சந்தித்ததாகச் சொல்கிறார்களே..?’ என்று கேட்டோம். முகம் சிவந்து சீற்றமானவர், 'இது யாரோ வேண்டாத ஆளுங்க கிளப்பிவிட்ட வதந்தி...’ என்று கொந்தளித்தார். ஆக, அரசு தலையிட்டும் இடியாப்பச் சிக்கல் நீடிக்கத்தான் செய்கிறது.

மிஸ்டர் மியாவ்: தாராள தாரா!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு