Published:Updated:

மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!

மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!

பிரீமியம் ஸ்டோரி
##~##

• கேரளாவில் 'கோச்சடையான்’ படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பி விட்டார், ரஜினி. கடந்த 27-ம் தேதி காலை, ராகவேந்திரா மண்டபத்தில் இருந்த ரஜினியை, தன் மகன் விக்ரமுடன் சந்தித்தார் பிரபு. 'கும்கி’ படத்தில் நடிக்கும் சிவாஜி பேரன் விக்ரமைப் பாராட்டி வீடியோ க்ளிப்பிங் எடுக்கப்பட்டது. பொதுவாகவே, இதுபோன்ற புரமோஷன் விவகாரங்களில் கழன்றுகொள்ளும் ரஜினி, சிவாஜி மீதுகொண்ட பேரன்பால், அற்புதமாகப் பேசினாராம்.   

• வெற்றிமாறன் உதவியாளர் செந்தில் இயக்கும் புதுப்படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன்.  தயாரிப்பாளர் யார் தெரியுமா? தனுஷ். ஆம், '3’ படத்தின் நஷ்டத்தை, சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை வாங்குவதன் மூலம் கணக்கை நேர் செய்துகொள்ள இருக்கிறதாம் பாதிக்கப்பட்டோர் சங்கம்!

மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!

• உதவி டைரக்டர்களுக்கு சம்பளமும் பேட்டாவும் தராமல் இழுத்தடிப்பதுதான் தமிழ்ப்பட இயக்குனர்களின் ஸ்டைல். ஆனால், 'கட்டிப்பிடி வைத்திய டைரக்டர்’ மிஸ்கின், தன்னிடம் வேலை பார்க்கும் உதவி இயக்குனர்கள் இருவருக்கு கார் வாங்கிக் கொடுத்து இருக்கிறார். டியூ கட்டுறது யாருப்பா?

• 'மயக்கம் என்ன’, '3’ என்று சீரியஸ் உளவியல் சப்ஜெக்ட்டில் நடித்து தனுஷ§க்குப் போரடித்து விட்டதாம். அதனால், முழுநீளக் காமெடிக்கு ஆர்வமாக இருந்தவரிடம், 'களவாணி’ ஸ்டைல் காமெடிக் கதை சொன்னார், சற்குணம். உடனே ஓகே சொல்லி,  'பொல்லாதவன்’ தயாரிப்பாளர் கதிரேசனை வரவழைத்து, சற்குணம் கையில் ஒப்படைத்து விட்டாராம் தனுஷ்.

• 'போடா போடி’ படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பா​வாக நடிக்கிறார் சிம்பு. குழந்தைக்காக பலத்த தேடுதல் வேட்டை நடந்தது. சிம்புவின் உறவினர் குழந்தையான சம்ரத்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மிஸ்டர் மியாவ்: சிம்புவின் குழந்தை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு