பிரீமியம் ஸ்டோரி
##~##

• '3’ பட பிரச்னை, பற்றி எரிந்து கொண்டு இருக்க, ஆப்பிரிக்காவில் இருக்கிறார், தனுஷ். ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் பரத்பாலா இயக்கும் புதிய படத்துக்காகத்தான் அங்கே டேரா போட்டு இருக்கிறார். இங்கே இருதுருவ டாட்டர்களுக்கும் டாடா காட்டி விட்டு, 'பூ’ பட நாயகி பார்வதியுடன் டூயட் பாடிக் கொண்டு இருக்கிறார்! 

• விஷால் அடுத்து நடிக்க இருக்கும் படத்தின் பெயர், 'எம்.ஜி.ஆர்.’ மகா, கதா, ராஜா என்ற மூன்று கேரக்டர்களின் சுருக்கம்தான் எம்.ஜி.ஆராம். மூன்று வேடங்களில் நடிக்கும் விஷாலுக்கு ஜோடி, ராதா மகள் கார்த்திகா. இந்தப் படத்தை குஷ்பூவின் ஆத்துக்காரர், சுந்தர்.சி டைரக்ஷன் செய்கிறார்.

• நாகிரெட்டியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ''1994-ல் விகடனில் நாகி ரெட்டியார் கொடுத்த பேட்டியைப் படித்து அதிசயித்தேன். ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டுடியோவை நிறுவியவர். எம்.ஜி.ஆர், என்.டி.ஆரிடம் வேலை வாங்கியவர். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்களே தங்களை சில்வர் ஸ்பூன் பார்ன் சொல்லிக் கொள்ளும் காலத்தில், 'நான் மாட்டுத் தொழுவத்தில் பிறந்தேன்...’ என்று பகிரங்கமாகச் சொல்லி இருப்பதைக் கண்டு திகைத்துப்​போனேன்...'' என்று வியந்தார்!  

மிஸ்டர் மியாவ்

• கமல் நடிக்கும் 'விஸ்வரூபம்’ படத்தை ஜெயா டி.வி. விலைக்கு வாங்கிவிட்டதாகப் பரபரக்கும் செய்தியில் உண்மை இல்லையாம். ''கமலிடம் இருந்து 'விஸ்வரூபம்’ படத்தை நாங்கள்தான் வாங்கி இருக்கிறோம். ஜூன் 25-ம் தேதி படம் ரிலீஸாகிறது. தவிர, பாலாவின் 'பரதேசி’, செல்வராகவனின் 'இரண்டாம் உலகம்’ இரண்டையும் பிரமாண்டமாகத் தயாரித்து வருகிறோம்'' என்று பி.வி.பி. சினிமா தரப்பில் சொல்கிறார்கள்.

மிஸ்டர் மியாவ்

• கடல்’ படத்தில் நடித்து வரும் கார்த்திக் மகன் கௌதமிடம், 'படம் ரிலீஸாகும் வரை மீடியா வெளிச்சம் வேண்டாம்’ என்று கண்டிஷன் போட்டுள்ளாராம், டைரக்டர் மணிரத்னம். 'தாத்தா முத்துராமன் போலவே கௌதம் இருக்கிறார்’ என்பது சரிதானா என்று, இந்தப் படத்தைப் பார்த்து நீங்களே சொல்லுங்கள்.

மிஸ்டர் மியாவ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு