என் விகடன் - சென்னை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
என் விகடன் - திருச்சி
Published:Updated:

ஹோம்லி ஃபிகர்... ப்ரெண்ட்லி ஃபிகர்!

ஓவியாஞ்சலி கலாட்டா!

 லகலப்பு படத்தின் புரொமோ ஸ்பாட்! டைட்டிலைப் போலவே கலகலப்புக்குப் பஞ்சமில்லை. காரணம், இரண்டு ஏஞ்சல்களின் அட்டகாசத்தில் டோட்டல் ஏரியாவே அதகளப்பட்டுக்கிடந்தது. கிடைத்த கேப்பில் தேவதைகளின் அரட்டைக் கச்சேரியை நான் ஒட்டுக் கேட்டபோது...

ஹோம்லி ஃபிகர்... ப்ரெண்ட்லி ஃபிகர்!
##~##

''ஹாய் அஞ்சலி அக்கா... இந்த காஸ்ட்யூம்ல அப்படியே 'தில்லானா மோகனாம்பாள்’ பத்மினி மாதிரியே இருக்கீங்க?''- இது லொள்ளு ஓவியா! ''நீங்ககூடத்தான் 'அன்பே வா’ சரோஜாதேவி மாதிரியே இருக்கீங்க... நான் எதும் சொன்னேனா?’ ’- இது அஞ்சலியின் பவுன்ஸர். ''என்னை அக்கானு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவர் ஓவியா. நாம ரெண்டு பேரும் பேரைச் சொல்லியே கூப் பிட்டுக்குவோம். டீல் ஓ.கேயா?'' அஞ்சலியின் சியர்-அப் சிம்பலுக்கு இரண்டு கைகளாலும் சியர்-அப் காட்டினார் ஓவியா.

''ஆக்ச்சுவலி சீனியர்ங்கிறதாலதான் அக்கானு கூப்பிட்டேன். மத்தபடி அஞ்சலினு கூப்பிடுறதுதான் எனக்கும் பிடிச்சிருக்கு... ஆமா, 'அங்காடித் தெரு’ படம் பார்த்துட்டு நான் அழுதேன் தெரியுமா? எப்படிப்பா அப்படி ஒரு நடிப்பைக் கொண்டுவந்தீங்க?'' என ஆச்சர்யத்தோடு ஓவியா கேட்க, ''அந்தப் படத்துக்காக நிஜமாவே சேல்ஸ் கேர்ளா மாறிட்டேன். இப்போ எங்கே கடைக்கு டிரெஸ் எடுக்கப் போனாலும் கறாரா, 'இந்த சம்க்கிவெச்ச டிசைன் அவ்வளவு காஸ்ட்லி வராதே... இந்த மெரூன் கலருக்கு நீங்க சொல்ற கட்பீஸ் மேட்ச் வராதேனு பின்னி எடுத்துடுறேன்... பார்க்கிறவங்க அஞ்சலி இவ்ளோ கஞ்சூஸானு குழம்பிப் போய் இருப்பாங்க... ஹாஹா... ஹாஹா!''-அதிர்ந்து சிரிக்கும் அஞ்சலி ஓவியாவைப் பார்த்து,

'' 'களவாணில’ நடிச்சப்போ உன்னைப் பார்த்து 'தஞ்சாவூர் பொண்ணோ’னு நினைச்சிட்டேன். அப்புறமாத்தான் கேரளானு கேள்விப்பட்டேன். ஆமா... 'மெரினா’ படத்துல வர்ற மாதிரி காதல் அனுபவம் இருக்கா உனக்கு?'' அஞ்சலியின் கேள்விக்கு ஷாக் ஆன ஓவியா, ''ஐயோ... காதல் ஒரு கத்தரிக்காய்னு சொல்வாங்க இல்லையா... சாப்பாட்டுல கத்தரிக்காயும் வாழ்க்கைல காதலும் அலர்ஜிப்பா எனக்கு. வீட்டுல பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு மேரேஜுக்குப் பிறகு லவ் பண்றதுலதான் த்ரில் இருக்கு. ஆமா, என்னை இவ்ளோ கேக்குறியே நீ இன்னும் லவ் பண்ணலையா?''- கண்ணடித்தபடி ஓவியா கேட்க, அஞ்சலி சமாளிஃபிகேஷனை தட்டிவிட்டார்.

ஹோம்லி ஃபிகர்... ப்ரெண்ட்லி ஃபிகர்!

''குட்டியூண்டு பாப்பாவா ஸ்கூல் போறப்போ ஸ்லேட் குச்சி தந்த பையன்மேல பப்பி லவ் இருந்திருக்கு. ஆனா, இப்போ என்னோட வேலையை மட்டும்தான் லவ் பண்றேன்பா. உனக்குக் காதல் அலர்ஜின்னா எனக்கு அது ஆந்த்ராக்ஸ் கிருமிப்பா!'' என்று பதறல் ஸ்டேட்மென்ட் கொடுக்கிறார் அஞ்சலி பாப்பா.

''இந்த டிரெஸ்ல நம்ம ஸ்டில்ஸைப் பார்த்ததும் செம க்ளாமரஸ் மாடர்ன் படம்னு நினைக்கப் போறாங்க. கேரக்டர் இன்ட்ரோ கொடுத்துக்கலாமா அஞ்சலி!'' என்று ஓவியா கேட்க, ''ஓ எஸ்! படம் முழுக்க காட்டன் புடவை கட்டிக்கிட்டு ஹோம்லியாத்தான் நடிச்சிருக்கேன். பசங்களுக்கு என்னை ஹோம்லி ஃபிகர்னுதான் பிடிக்கும். அந்தப் பேரை என்னைக்கும் கெடுத்துக்க விரும்பலை. அவங்க அஞ்சலி நல்லா நடிக்குதுப்பான்னு சொல்றதுதான் என் எனர்ஜி. நான் எது பண்ணாலும் என்கரேஜ் பண்ற ரசிகர்கள் இருக்காங்க. அவங்க எனக்கு ரொம்ப முக்கியம்'' என்று அஞ்சலி நீட்டி முழக்கிக்கொண்டே போக... இடைமறித்த ஓவியா, ''ஆரம்பத்துல உங்களை வாயாடிப் பொண்ணுனு நினைச்சேன். பேசவே தயக்கமா இருந்தது. இவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பீங்கனு தெரிஞ்சிருந்தா ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள்ல இருந்தே நாம பேசி இருக்கலாம்!'' என்றார். ''நானும் 'மெரினா’ பார்த்துட்டு, ரொம்ப கெத்தா இருப்பேன்னு நினைச்சேன். இப்ப என்ன ஆச்சு... பார்த்தியா.

ஹோம்லி ஃபிகர்... ப்ரெண்ட்லி ஃபிகர்!

நாம ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம். அதனால தான் நாம இப்போ ஃப்ரெண்ட்ஸ் ஆகி இருக்கோம். என்னைப் போல லைஃபை நீயும் டேக் இட் ஈஸியா எடுத்துக்குறப் பொண்ணா இருக்கே... அதனாலதான் ஓவியா நமக்குள்ள சிங்க் ஆச்சு. இப்போ நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். இனி முடிஞ்சா அடிக்கடி நாம சேர்ந்து படம் பண்ணலாம். நான் ரெடி... நீ ரெடியா?'' என அஞ்சலி கேட்க, ''டபுள் ஓ.கே.'' என்கிறார் ஓவியா,

அஞ்சலியின் கையைப் பிடித்து!

- க.நாகப்பன்
படங்கள்: அ.ரஞ்சித்