
சென்னை: சென்னையில் இன்று தொடங்க இருக்கும் இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படாதது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு திடீரென அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணைத் தலைவர் தேவராஜ், எடிட்டர் மோகன் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதிக்கு அழைப்பிதழை கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட கருணாநிதி "வாழ்த்துக்கள்!" என்று மட்டும் சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தனக்கு அழைப்பு விடுக்கப்படாதது குறித்து," நான் யார்...எனக்கு அழைப்பு விடுக்க...?" என்று வேதனையுடன் அறிக்கை ஒன்றில் கருணாநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலு மகேந்திராவுக்கு அழைப்பில்லை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதனிடையே இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்கு தனக்கு அழைப்பில்லை என இயக்குநர் பாலு மகேந்திரா தெரிவித்துள்ளார்.
##~~## |