Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:

• 'ஹரிதாஸ்’ எனது கனவுப்படம் என்று செப்பி வருகிறார் சிநேகா. திருமணத்துக்குப் பிறகு விருந்து கொடுக்க உறவினர்கள் பலரும் அழைக்க... எங்குமே செல்ல முடியாத அளவுக்கு படப்பிடிப்பில் பிஸியோ பிஸி. இந்தப் படத்துக்காக ஹனிமூன் டிரிப் பையே கேன்சல் செய்திருக்கும் சிநேகா, ஹரிதாஸ் என்ற சிறுவனுக்கு அழுகாச்சி அம்மாவாக வருகிறார். 

•  ஆர்ட் டைரக்டரான ராம்கி ராமகிருஷ்ணா, 'சொல்லி அடிப்பேன்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ராம்கியை சொல்லாமல் அடித்துப் படுக்கவைத்துவிட்டது. மீண்டும் இப்போது 'இதயம் திரையரங்கம்’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டார். படம் முழுக்க 'வெண்ணிற ஆடை’ மூர்த்தி ஸ்டைலில் கதாநாயகியே டபுள் மீனிங் டயலாக்ஸை அவிழ்த்துவிடுகிறாராம்.

மிஸ்டர் மியாவ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  'ஏ.ஆர்.முருகதாஸுக்கு 'ரமணா’ மூலம் பிரேக் கொடுத்தீங்க. அவர் கல்யாணத்தை நீங்கதான் கள்ளக்குறிச்சி போய் நடத்தி வச்சீங்க. அதனால சண்முகப் பாண்டியன் படத்தை முருகதாஸ் டைரக்ஷன் செஞ்சா, நல்ல ஓப்பனிங் கிடைக்கும். நீங்க சொன்னா மறுக்கவே மாட்டார்’ என்று கேப்டனிடம், குடும்பத்தார் கோரிக்கை வைக்கிறார்களாம். எப்படிக் கேட்பது என்று தர்மசங்கடத்தில் நெளிகிறார் விஜயகாந்த்.

•  'நந்தா’ படத்தில் ஸ்மால் சூர்யாவாக உருட்டுவிழி காட்டி மிரட்டிய வினோத், 'நான் மகான் அல்ல’ படத்தில் வில்லன் வேஷம் கட்டி பயமுறுத்தினார். அடுத்து 'கலியுகம்’ படத்தில் ஹீரோவாகிறார். ராமராஜனை முதன் முதலாக ஹீரோவாக்கி படத்தைத் தயாரித்தவர் வி.அழகப்பன். அவருடைய மகன் யுவராஜ் அழகப்பன் இந்தப் படத்தை இயக்குகிறார்.

•  'என் படத்துக்கு பெண்கள் கூட்டம் அலை மோதும்...’ என்றுதான் டைரக்டர்கள் வழக்கமாக முண்டா தட்டு வார்கள். ஆனால், 'மதுபானக் கடை’ கமலக்கண்ணன், 'என்னுடைய படத்தைப் பார்க்க தியேட்டருக்கு பெண்கள் வரவே மாட்டாங்க...’ என்று பகிரங்க மாகச் சொல்கிறார்.

##~##
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism