Election bannerElection banner
Published:Updated:

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”

''இப்போ இருக்கிற மாதிரி அப்போ கீழ்ப் பாக்கத்துல பெரிய பெரிய கட்டடங்கள் அதிகம் கிடையாது. ரொம்பவே சிம்பிளா ஒருவித அமைதியோட இருக்கிறதுதான் கீழ்ப் பாக்கம் ஸ்பெஷல். ஆனால், இந்தப் பத்துப் பதினஞ்சு வருஷத்துல கீழ்ப்பாக்கம் அடியோட மாறிடுச்சு. நான் குடியிருந்த அபார்ட்மென்ட் மட்டும் அப்படியே இருக்கிறது சின்ன ஆறுதல்!'' - தான் வளர்ந்த கீழ்ப்பாக்கம் பற்றி தீராத அன்போடு பேசுகிறார் சின்னத்திரை நடிகர் தீபக்.

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”
##~##

''ஹனி தேவ் அபார்ட்மென்ட், ரெண்டாவது மாடி, பிளாட் நம்பர் 35. இதுதான் அப்போ நாங்க கீழ்ப்பாக்கத்துல குடியிருந்த வீட்டு முகவரி. பள்ளி, கல்லூரினு என் டீன் ஏஜ் நாட்கள் இங்கதான் கழிஞ்சுது. ராயப்பேட்டை கில்லாரிஸ் ஸ்கூல்லதான் படிச்சேன். டெய்லி சைக்கிள்லதான் ஸ்கூல் போவேன். ஈஸியாப் போகக் குறுக்கு வழிகள் இருந்தாலும் டெய்லர்ஸ் ரோட்டைக் கடந்துதான் போவேன். அந்தளவுக்கு டெய்லர்ஸ் ரோடு எனக்கு இஷ்டம்.

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”

வீட்டுக்குப் பக்கத்துல உள்ள  கிரவுண்டுதான் எங்க குரூப்பின் மீட்டிங் பாயின்ட். கால்பந்து, கலாய்ப்புனு தினமும் இங்கதான் பொழுது கழியும். லீவு நாள்னா கூட்டம் அள்ளும். இங்க விளையாட இடம்பிடிக்கிறதுக்காக காலங்காத்தாலேயே வந்து உட்கார்ந்திருவோம். அந்த நாளெல்லாம்  இனிமையானவை. அப்ப இந்த கிரவுண்டு ஃபுல்லா செம்மண்தான். காலையில வந்து நாங்க விளையாடி முடிச்சு மத்தியானம் வீட்டுக்குப் போறப்ப ஒவ்வொருத்தரோட டிரெஸ்லயும் கிலோ கணக்குல மண்ணு  இருக்கும். அப்போ எனக்கும் கிரிக் கெட்டுக்கும் பெரிய அளவுல இடைவெளி. ஆனால், எங்க ஏரியா ஃப்ரெண்ட்ஸ் கிரிக்கெட் ஆடப் போனா கூடவே போயிருவேன். தண்ணி பாட்டில் எடுத்துட்டு வந்து கொடுப்பேன். பந்து பொறுக்கிப் போடுவேன். எங்க டீமுக்காக நடிகர் விஷால் இந்த கிரவுண்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாடினது இப்பவும் ஞாபகத்துல இருக்கு.

குண்டு விஜய், ஒல்லி விஜய், அஞ்சு, மஞ்சு, சஞ்சுனு எங்க அப்பார்ட்மென்ட்ல எனக்கு ஏகப் பட்ட ஃப்ரெண்ட்ஸ். ஒவ்வொரு நியூ இயரையும் ஆட்டம் பாட்டம்னு தடபுடலாக் கொண்டாடுவோம். அப்பல்லாம் எங்க ஃப்ரெண்ட்ஸோட ஆட்டம் கட்டுக்கடங்காம மிட் நைட்டைத் தாண்டியும் தொடரும்.

எங்க ஏரியாவுல 15 வருஷத்துக்கு முன்னாடி ஒன்பது மாடி அரிஹந்த் அபார்ட்மென்ட்தான் பெரிய கட்டடம். 'எப்படிடா இவ்ளோ பெரிய பில்டிங்கை கட்டியிருப்பானுங்க’னு பல நாள் அதை வெறிச்சு வேடிக்கைப் பார்த்திருக்கேன். ஆனால், இப்ப சென்னையில அதைவிட படா படா பில்டிங்எல்லாம் வந்துடுச்சு. எங்க ஏரியா 'பாஸ் ஜிம்’ பற்றியும் சொல்லியே ஆகணும். உடம்பை ஓரளவுக்கு ஃபிட்டா வெச்சிருக்கிறதுக்கு அங்க பண்ணின வொர்க் -அவுட்தான் முக்கியமான காரணம்.  நடிகர் சூர்யா இந்த ஜிம்மோட பழைய கஸ்டமர்.

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”

வருஷா வருஷம் எங்க ஏரியாவுல இருந்து  வேளாங்கண்ணி கோயிலுக்கு சைக்கிள்லயே பயணம் பண்ற மூணு பேருக்கு நான்தான் ஸ்பான்சர். இந்த ஏரியாவின் செல்லப் பிள்ளை நான். பத்து வருஷத்துக்கு முன்னாடி நண்பர்களோட சேர்ந்து 'அஜீத் ரசிகர் மன்றம்’  எங்க ஏரியாவுல ஆரம்பிச்சேன். இன்னைக்கு இங்க உள்ள எல்லாரும் சேர்ந்து எனக்கு ரசிகர் மன்றம் வச்சிருக்காங்கனு நினைச்சாப் பெருமையா இருக்கு!''

”கிரிக்கெட் விஷால்... வொர்க்-அவுட் சூர்யா!”

- சா.வடிவரசு
படங்கள்: அ.ரஞ்சித்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு