'வாலு’ பட ட்ரெய்லரில், 'சில பேரைப் பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும். உன்னைப் பார்த்த உடனே பிடிச்சிருக்கு...’ என்று தனுஷை வம்புக்கு இழுத்து இருக்கிறார் சிம்பு. ஏன் இந்தக் கொலவெறி என்று சிம்புவிடம் கேட்டால், 'சாமி சத்தியமா எனக்குத் தெரியாதுங்க... டைரக்டர்கிட்ட கேளுங்க...’ என்று எஸ்கேப் ஆகிறார்.

தனுஷிடம் கேட்டோம். ''ரஜினி சாரோட, 'நான் ஒரு தடவை சொன்னா...’ டயலாக்கைப் பேசாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க. அந்த அளவுக்கு அந்த வசனம் பிரபலம். அதுபோலத்தான் என்னோட 'படிக்காதவன்’ பட டயலாக் அவங்களுக்குப் பிடிச்சிருக்கு... அதனால யூஸ் பண்ணி இருக்காங்க. இதுல நான் வருத்தப்பட ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த வசனத்தை எழுதினது நான் இல்லை, டைரக்டர் சுராஜ்...'' என்கிறார். இப்படி எல்லாம் ஈஸியா முடிக்கக் கூடாதே!

அமீரின் 'ஆதிபகவன்’ படத்தில் ஜெயம் ரவி இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். அதில் ஒன்று திருநங்கை வேடம். ஷூட்டிங் எடுத்தது வரை போட்டுப் பார்த்த தயாரிப்பாளர் ஜெ.அன்பழகன் பிரமிப்பாகி, அமீரைக் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்துவிட்டாராம்.

சென்னை, திருவல்லிக்கேணியில் இருக்கும் ராகவேந்திரா கோயிலுக்கு அடிக்கடி செல்கிறார் ரஜினி. இரவு நடை சாத்திய பிறகு, நெடுநேரம் தியானம் செய்கிறார்.

ஒவ்வொரு நாளும் ஒரு காரில் செல்லும் அளவுக்கு, தயாரிப்பாளர் ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு வசதி உண்டு. ஆனால், மனிதர் இப்போதும் பழைய ஆட்டோவில்தான் பயணம் செய்கிறார். மனம் சரியில்லை என்றால் ஏதாவது ஒரு சுடுகாட்டுக்குச் சென்று மணிக்கணக்கில் கல்லறைகளை வெறித்துப் பார்ப்பாராம். அதுவே மனசுக்குப் புத்துணர்ச்சி கொடுத்துவிடுமாம்.