Published:Updated:

நடிகர் சந்தானம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

Vikatan Correspondent
 நடிகர் சந்தானம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
நடிகர் சந்தானம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!
 நடிகர் சந்தானம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

சென்னை:  காமெடி நடிகர் சந்தானம், நடிகர் சூர்யாவின் உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா வீடு, அலுவலகம் உள்பட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யாவின் உறவினரும், தயாரிப்பாளருமான ஞானவேல்ராஜா, காமெடி நடிகர் சந்தானம், தயாரிப்பாளரும், நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.செளத்ரி, ஏ.எம்.ரத்னம் ஆகியோரது சென்னை வீடு, அலுவலகங்களில், இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

 நடிகர் சந்தானம் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

தற்போது, நடிகர் சூர்யாவின் சகோதரர் கார்த்திக் நடித்துள்ள 'அழகுராஜா' என்ற படத்தை ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளிக்கு வெளிவருகிறது.

இந்நிலையில், ஞானவேல்ராஜாவின் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

##~~##
காமெடி நடிகர் வடிவேலுக்கு பிறகு தற்போது காமெடி நடிகர் சந்தானம் கொடிகட்டி பறக்கிறார். மேலும், பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சி கலந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.