Published:Updated:

மிஸ்டர் மியாவ்: விஜய் கட்டளை!

மிஸ்டர் மியாவ்: விஜய் கட்டளை!

பிரீமியம் ஸ்டோரி

• ''ஜிம்முக்குப் போ... ஸ்லிம்மாயிட்டு வா...'' என்று 'அங்காடித் தெரு’ப் பெண்ணுக்கு ஆர்டர் போட்டு

##~##

இருக்கிறார் விஜய். விக்ரமை வைத்து விஜய் அடுத்து இயக்கப்போகும் படத்துக்காகத்தான் இந்த கண்டிஷன். ஹலோ... இது டைரக்டர் விஜய்!

• ''நாலஞ்சு மாசம் யூஸ் பண்ற செருப்பு, சட்டையைக்கூட நாலைஞ்சு கடை ஏறி இறங்கிப் பார்த்துத்தானே செலெக்ட் பண்றோம். ஆனா, இந்தக் காதல் மட்டும் ஒரே லுக்ல வந்துட, அது என்ன கண் வலியா? அது ரொம்பத் தப்பு!'' என்கிற ரிவர்ஸ் கான்செப்ட்டில், 'ரேணிகுண்டா’ பன்னீர்செல்வத்தின் உதவியாளர் பட்டுராஜா, ஒரு படம் பண்ணுகிறார். பட டைட்டில், 'மதிகெட்டான் சாலை’!

மிஸ்டர் மியாவ்: விஜய் கட்டளை!

• சென்னையில் டேரா போட்டு விக்ரமுடன் 'தெய்வ மகன்’ படத்தில் நடித்துவரும் அனுஷ்கா, ''எனது அடுத்த இலக்கு ரஜினி, கமலுடன் நடிப்பதுதான். அது வரை தமிழில் வேறு நடிகர்களுடன் ஜோடி சேர மாட்டேன்...'' என்று பாஞ்சாலி ரேஞ்சுக்கு பகீர் சபதம் போட்டு இருக்கிறாராம்!

• இராம.நாராயணன், இப்போது சைலன்ட்டாக மலேசியாவில் ஒரு புதுப் படத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறார். 'தமிழ்ப் படம்’ சிவா ஹீரோவாக நடிக்கும் அந்தப் படத்தின் நாமகரணம், 'சிவா பூஜையில் கரடி’! எப்பூடி?

மிஸ்டர் மியாவ்: விஜய் கட்டளை!

• பிரபல அலைபேசி நிறுவனம் பொம்மைப் படத்துக்காக செலவு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்டு செம குடைச்சல் கொடுக்கிறதாம். செய்வதறியாது திகைத்து நிற்கிறதாம் வாரிசு!

மிஸ்டர் மியாவ்: விஜய் கட்டளை!

• பாட்டு ஹீரோவுக்கு பெரிய இடத்துப் பெண்மணியோடு கசமுசா. இதனால் குடும்பத்தில் குழப்பம் கதகளி ஆடுகிறதாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு