ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

##~##

• சினேகா மிகவும் சிரத்தை எடுத்து நடித்து வரும் திரைப்படம், 'ஹரிதாஸ்’. திரையில் பாடல் பாடுவதற்கு நீண்ட விடுமுறை விட்டிருந்த கமல், இந்தப் படத்துக்காக ஓர் உற்சாகப் பாடலைப் பாடி இருக்கிறார்.   

• மழை விட்டாலும் தூவானம் விடாத கதையாக தனுஷ் - ஐஸ்வர்யா பிரச்னை இன்னமும் ஓயவில்லை. சமீபத்தில் பல விழாக்களில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டாலும், உற்சாகம் மட்டும் மிஸ்ஸிங்.

• பழம்பெரும் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. மறைந்தபோது இறுதிச்சடங்கு முடியும் வரை இருந்தார், பாரதிராஜா. ஒரு காலத்தில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்ட பாரதிராஜாவுக்கு தனது சொந்தச் செலவில் திருமணம் செய்து வைத்தவர் கே.ஆர்.ஜி.

மிஸ்டர் மியாவ்

• 'உங்கள் ல.தி.மு.க. கட்சி பிரசாரத்துக்கு சிம்பு வருவாரா?’ என்று ஒருவர் டி.ராஜேந்தரிடம் கேட்டார். அம்புட்டுத்தான்... எழுந்து நின்று பிடறி சிலுப்பி டண்டணக்கா என்று கரகாட்டம் ஆடி விட்டார் டி.ஆர். கடைசி வரை பதில் மட்டும் சொல்லவே இல்லை.  

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்