Published:Updated:

இந்திய சினிமாவின் தந்தைக்கு மரியாதை!

இந்திய சினிமாவின் தந்தைக்கு மரியாதை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய சினிமாவின் தந்தைக்கு மரியாதை!
##~##
ந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில் திருவண்ணாமலையில் உள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திரை இயக்கம், ஜூன் 15-ம் தேதியில் இருந்து ஜூலை 5-ந் தேதி வரை ஒரு திரைப் பயணத்தை மேற் கொண்டது. ஜூன் 15-ம் தேதி செங்கத்தில் தொடங்கிய திரைப்பயணத்தின் ஒரு பகுதியாகத் திருவண்ணாமலை டவுன்ஹால் பள்ளி வளாகத்திலும் பயணத்தின் சுவடு பதிந்தது. அப்போது இந்தியாவின் முதல் சினிமாவைத் தாதா சாகேப் பால்கே எவ்வாறு கஷ்டப்பட்டுத் தயாரித்து வெளியிட்டார் என்பதை விளக்கும் 'ஹரிச்சந்திராச்சி ஃபேக்டரி’ என்ற மராத்தியக் குறும்படம் திரையிடப்பட்டது.
இந்திய சினிமாவின் தந்தைக்கு மரியாதை!

தொடக்கத்தில் மேஜிக் நிபுணராக இருந்த பால்கே, ஆங்கிலேயர் ஒருவர் படம் திரையிட்டு இருப்பதைப் பார்க்கச் சென்றார். பிறகு, சினிமா என்னும் மகத்தான கலையால் கவரப்பட்டவர் லண்டன் சென்று தங்கி திரைப்படத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். ஒரு கேமராவுடனும் கொஞ்சம் படச் சுருள்களுடனும் இந்தியா திரும்பியவர் முதல் படமான 'ராஜா ஹரிச்சந்திரா’வை உருவாக்க பட்டப் பாட்டைக் குறும்படம் விரிவாகப் பேசியது. பெண் வேடத்தில் நடிக்க யாரும் முன் வராததால் மீசையை மழித்துவிட்டு ஆண்களைக்கொண்டே திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் பால்கே.

சினிமாவும் தமிழ்ச் சமூகமும் ஒன்றுடன் ஒன்று பிரிக்க முடியாதவாறு மாறிவிட்ட இந்தக் காலகட்டத்தில் முதல் சினிமாவின் உருவாக்கம் பற்றிய குறும்படத்தைப் பார்த்தது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!

- கோ.செந்தில்குமார்
படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு