Published:Updated:

மிஸ்டர் மியாவ்: சீயானை வீழ்த்திய டாப்ஸி..

மிஸ்டர் மியாவ்: சீயானை வீழ்த்திய டாப்ஸி..

பிரீமியம் ஸ்டோரி

• ஒரு ரூபாய்கூட சம்பளம் தராமல் ரவிதேஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோரை வைத்து தெலுங்குப்

##~##

படத்தைத் தயாரித்து இயக்கு​கிறார் ராம்கோபால் வர்மா. ஹாலிவுட் ஸ்டைலில் படம் ரிலீஸான பிறகு,  வரும் வரு​மானத்தில் பங்கு தரப் போகிறாராம்!

• 'ஆடுகளம்’ டாப்ஸியின் அழகு சீயானை பாடாய்ப்படுத்திவிட்டதாம். அதனால் அடுத்து சுசீந்திரன் இயக்கும் படத்தில் விக்ரமின் ஜோடி டாப்ஸியாம்!

• 'படிக்காதவன்’ படத்தின்போது டப்பிங் பேசாமல் இழுத்தடித்தார் தனுஷ். ''நானே பேசுகிறேன்...'' என்று டைரக்டர் சுராஜ் சொல்லவே, அலறியபடி ஓடி வந்து டயலாக் பேசினார். அதனால் டூ-விட்டு இருந்த இருவரையும் யூ-டி.வி. நிறுவனம் இணைத்துப் புதுப் படம் தயாரிக்கிறது.

மிஸ்டர் மியாவ்: சீயானை வீழ்த்திய டாப்ஸி..

• தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் ரொம்ப நாட்களுக்கு முன்னரே அட்வான்ஸ் வாங்கி இருந்தார் செல்வராகவன். அந்த படத்துக்கு தனுஷை ஹீரோவாக்கி, 'இரண்டாம் உலகம்’ என்று தலைப்பும் வைத்திருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்: சீயானை வீழ்த்திய டாப்ஸி..

• அரசியலுக்கு ஆசைப்படும் இளைய நடிகர் இலை நிழலில் இளைப்பாறுவதைத் தடுக்கத் துடிக்கிறது பெரிய இடம். அதனால், சமரசம் பேச கரை வேட்டிகள் படை எடுக்கிறார்களாம்.

மிஸ்டர் மியாவ்: சீயானை வீழ்த்திய டாப்ஸி..

• ஜூன் மாசம்தான் டும்டும்டும்.  ஆனால், இப்போதே ஹைதராபாத்தில் தாடிவாலாவுடன் தனிக்குடித்தனம் நடத்துகிறாராம் நம்பர் நடிகை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு