மிஸ்டர் மியாவ்

• 'டை எனக்கு ஒத்துக்கலை... அதனாலதான் என் தலைமுடி எல்லாம் கொட்டிடுச்சு...’ என்று ரஜினி ஒரு முறை சொன்னார். அதனாலோ என்னவோ தனது தலை முடிக்கு டை அடித்துக்கொள்வதைத் தவிர்க்கிறார், விஜயகாந்த். முடிக்கு மருதாணி ட்ரீட்மென்ட்தான்!
• நடிகர் சங்கத்தின் நிலம் தொடர்பான பிரச்னைக்குப் பின்புலமாக இருப்பது பிரபல தயாரிப்பு நிறுவனமாம். கரன்ஸிக் கட்டுக்களால் கட்டிய பங்களாவில் வசிக்கும் அந்தப் புள்ளியை சமாளிப்பது எப்படி என்று புரியாமல் ரேகை தேய கையைப் பிசைகிறது சங்கம்!

• துபாயில் நடந்த சினிமா அவார்டு விழா ஒன்றில் சிம்பு, தனுஷ் கரம்கோத்தது போல, மீண்டும் சிம்பு - நயன்தாராவை இணைக்கும் ஏற்பாடும் நடந்ததாம். முதலில் பிகு பண்ணிய நயன்தாரா அப்புறம் ஓகே சொன்னாராம். ஆனால் கடைசி வரை போராடியும் நயனுக்கு விசா கிடைக்கவே இல்லை.
##~## |
• குழாயடிச் சண்டை ரேஞ்சுக்கு 'கோ’ பட விவகாரத்தில் அடித்துக்கொண்ட நமீதா - சோனா இப்போது திக் ஃப்ரெண்ட்ஸ். தனிமையில் அடிக்கடி சந்தித்து 'உற்சாகம்’ பொங்க உறவாடுகிறார்கள்.
