Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

##~##

• கவிப்பேரரசு வைரமுத்து விகடனில் எழுதிய, 'மூன்றாம் உலகப் போர்’ புத்தகத்தை கருணாநிதி கையால் சமீபத்தில் வெளியிட்டார். இந்தப் புத்தகத்​தை வெளியிட்டு மூன்று வாரம் கூட முழுசாக முடியவில்லை, அதற்குள் மூன்றாம் பதிப்பு ரெடியாம்! 

• 'சுந்தர பாண்டியன்’ ஷூட்டிங்...  டைரக்​டர் பாலா திடீர் விஜயம். ஆக்ஷன், கட் சொல்ல முடியாமல் கூச்சத்தில் டைரக்டர் பிரபு திணற... சசி​குமார் பேந்தப் பேந்த விழிக்க... பாலாவுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லையாம்.

• ஆஸ்கார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை அர்ஜுன் டைரக்​ஷன் செய்கிறார் என்று சொல்லி இருந்தோம். படத் தலைப்பை அர்ஜுனிடமே கேட்டோம். 'இன்னும் யாரிடமும் சொல்லலையே’ என்று தயங்கியவர், 'ஜெய்ஹிந்த்-2’ என்றார் குஷியாக.

மிஸ்டர் மியாவ்

• 'முகமூடி’ ஆடியோ விழாவில், 'லவ் சீன்ல கூட பூஜா ஹெக்​டேவிடம் என்னை நெருங்கவே விடாமல் வெறுப்பேத்திட்டார் மிஷ்கின்...’ என்று உதடுதுடிக்க ஆதங்கப்பட்டார், ஜீவா. 'கவலைப்​படாதீங்க. இன்னும் ரெண்டு பாட்டு ஷூட் பண்​ணணும். நெருக்​கமா... இணக்​கமா வைச்சுடலாம்...’ என்று மிஷ்கி​னும் ஆறுதல் சொன்னார்!      

• இந்தியில், 'டர்ட்டி பிக்சர்’ படம் தயாரான நேரத்தில், 'தயாரிப்​பாளர் மீது கேஸ் போடுவேன்...’ என்று வினுசக்ரவர்த்தி உட்பட பலர் வீரப்பிரகடனம் செய்தனர். இப்போது 'தமிழில் சில்க் கதையை எடுக்கப் போகிறேன்’ என்று பகிரங்கமாக அறிவித்தே பலர் கிளம்பி விட்டார்கள். கடுப்​பான இந்தித் தயாரிப்பு நிறுவனமான பாலாஜி டெலிபிலிம்ஸ், 'யாராவது சில்க் கதையைத் தயாரித்தால் நாங்கள் கேஸ் போடுவோம்...’ என்று தன் பங்குக்கு சவுண்டு விடுகிறது.

• வெங்கட் பிரபு டீமுடன் சேர்ந்து  'பிரியாணி' கிண்டுவதற்கு வேகமாக ரெடியாகி வருகிறார் கார்த்தி. வெங்கட் பிரபு வைத்திருந்த முந்தைய ஸ்கிரிப்​டில் காட்டமான அரசியல் நெடி இருக்க... 'வேணாம்னே! சகுனி சொல்லித் தந்த பாடமே போதும்...' என்றாராம் கார்த்தி. இப்​போது 'அரசியல் உண்டு... ஆனால் யாருக்கும் டென்ஷன் வராது' என்ற ரேஞ்சில் கதையில் 'டிங்கரிங்' வேலை நடக்கிறதாம்.

மிஸ்டர் மியாவ்