Published:Updated:

தாவி வருகுது ’முயல்’!

’ஸ்டில்’கள் உருவாக்கும் சினிமா!

தாவி வருகுது ’முயல்’!

’ஸ்டில்’கள் உருவாக்கும் சினிமா!

Published:Updated:

புகைப்படக் கலைஞர்களை அடிப்படையாக வைத்து எத்தனையோ படங்கள் வந்துள்ளன. சமீபத்தில் அப்படி வந்து ஹிட் அடித்த படம் 'கோ’. அந்தப் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், சிறந்த போட்டோகிராஃபர். இந்த நிலையில் ஒரு போட்டோகிராஃபரின் வாழ்க்கையைக் கதை யின் அடிநாதமாகக்கொண்டு போட்டோகிராஃபர்கள் ஒருங் கிணைந்து எடுத்து வரும் படம், 'முயல்’. இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது சேலத்தில் நடைபெற்றுவருகிறது.

தாவி வருகுது ’முயல்’!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'முயல்’ படத்தின் நிர்வாக இயக்குநர் பழனிகுமாரைச் சந்தித் தேன். ''தமிழகத்தில் புகைப்படக் கலையின் தந்தை என்றால் அவர் எஸ்.பி.எஸ்.குகன் சார்தான். போட்டோ மற்றும் வீடியோகிராஃபராக இருந்து எந்த இயக்குநரிடமும் உதவி இயக்குநராகப் பணிபுரியாமல் தானே ஒவ்வொரு சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டு இயக்குநர் ஆனவர். canan 5d mark2 கேமராவை வைத்து ஆவணப்படங்களும் குறும்படங்களும் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், குகன் சார் 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ என்ற ஒரு முழுப் படத்தையும் இந்த கேமராவை வைத்தே எடுத்தார். இதற்காக 'லிம்கா புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்’ சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளார். இவர்தான் தற்போது 'முயல்’ படத்தை இயக்கிவருகிறார்.

தாவி வருகுது ’முயல்’!

எங்களுக்குத் தமிழகம் முழுக்க இருக்கும் ஆயிரக்கணக்கான போட்டோகிராஃபர்கள் பரிச்சயம். போட்டோகிராஃபர்கள் ஒன்று சேர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் சமூக மாற்றம் ஏற்படும்விதமான நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம். கடந்த 2009-ம் ஆண்டு  சுமார் 5,000 போட்டோகிராஃபர்கள் ஒருங்கிணைந்து சென்னை நந்தம்பாக்கம் டிரேடு சென்டரில் ஒன்றுகூடி ஒரே நேரத்தில் அங்கு வரைந்து இருந்த பூமிப் பந்தைப் படம் எடுத்தோம். உலக வெப்பமயமாதலைத் தடுக்கும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சியாக இதைச் செய்தோம்.

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் திரைப்படம் எடுக்கும் யோசனை வந்தது. அதுதான் 'முயல்’ ஆக வடிவம் பெற்று வரு கிறது. நான் 'பெஸ்ட் போட்டோகிராஃபி டுடே’ என்ற இதழை நடத்திவருவதால் எனக்குத் தமிழ்நாடு முழுக்க சுமார் 50 ஆயிரம் புகைப்படக் கலைஞர்களை தெரியும். குகன் சாருக்கும் நிறையப் புகைப்பட கலைஞர்களைத் தெரியும். இப்படி எங்களுக்குத் தெரிந்த  திறமையான கலைஞர்களை ஒருங்கிணைத்து 'போட்டோ அண்ட் வீடியோகிராஃபர் என்டர்டெயின் மென்ட்’ நிறுவனத்தை உருவாக்கி னோம்.  

தாவி வருகுது ’முயல்’!

ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று அங்கு உள்ள புகைப்படக்கலை ஞர்களைச் சந்தித்து அவர்கள் கொடுத்த சிறு சிறு தொகைகளை வைத்துப் பெரிய பட்ஜெட் படமாக உருவாக்கி இருக்கிறோம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கருணாநிதி, பிரேம் நசீர், ராமகிருஷ்ணா என எத்தனையோ தமிழ், மலையாளம், தெலுங்குக் கலைஞர்களுக்கு அடையாளம் தந்த இடம்  சேலம். அதனால், நாங்களும் சேலத்தையே எங்கள் கதைத் தளத்துக்குத் தேர்வு செய் தோம்.

ஒரு போட்டோகிராஃபர் காது குத்து, கல்யாணம், கச்சேரி, சடங்கு, பிறப்பு, இறப்பு என எத்தனையோ நிகழ்வுகளை கவர் பண்ணுகிறார். ஆனால், அவர் வீட்டில் நடக்கும் ஒரு துக்கமான நிகழ்வை கவரேஜ் பண்ணும்போது அவர் மனதில் ஏற்படும் தாக்கம்தான் இந்தப் படத்தின் மையக் கரு. படத்தின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, தொழில்நுட்பம் என எல்லாமே போட்டோ மற்றும் வீடியோகிராஃபர்கள்தான்.

தாவி வருகுது ’முயல்’!

படத்தில் நவீனத் தொழில்நுட்பமான 'கோ.புரோ’ என்கிற கேமராவை பயன்படுத்திவருகிறோம். இந்த கேமராவைப் பயன்படுத்தி ஆழ்கடலில் கூடத் துல்லியமாகப் படம் எடுக்க முடியும். இந்தப் படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எங்கள் குழுவினருக்கு உள்ளது. திறமையான புகைப்படக் கலைஞர்களை அடையாளம் காண்பது, நலிவுற்ற புகைப்படக் கலைஞர்களுக்கு உதவுவது ஆகியன எங்கள் நோக்கம்'' நம்பிக்கையுடன் பேசுகிறார் பழனிகுமார்!

தாவி வருகுது ’முயல்’!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ஏ.எம்.சுதாகர்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism