Published:Updated:

ஜில்லா: அடக்கி வாசிக்கும் விஜய்!

Vikatan Correspondent
ஜில்லா: அடக்கி வாசிக்கும் விஜய்!
ஜில்லா: அடக்கி வாசிக்கும் விஜய்!
ஜில்லா: அடக்கி வாசிக்கும் விஜய்!

இளைய தளபதி விஜயின் 'ஜில்லா' படம் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அதாவது, ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏறக்குறைய படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டபோதிலும், படத்தின் 'புரமோ' குறித்து எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமலும் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி அடக்கியே வாசிக்கிறார்.

அதேபோன்று படத்தின் ஹீரோவான விஜயும், ஜில்லா வெளியாக இருப்பது குறித்து அதிகமாக எதுவும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு கூட விழாவாக அல்லாமல், நேரிடையாக கடைகளுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

##~~##
இதற்கெல்லாம் காரணம் விஜயின் தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைதான் என்றும், அதுபோன்ற சிக்கல்கள் ஜில்லா படத்தின் ரிலீசின்போது ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே விஜய்யும், தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும் அடக்கி வாசிக்கிறார்களாம்.