Published:Updated:

எனக்கு பல வீடுகள் இருக்கிறது: சொல்கிறார் பாரதிராஜா

எனக்கு பல வீடுகள் இருக்கிறது: சொல்கிறார் பாரதிராஜா
எனக்கு பல வீடுகள் இருக்கிறது: சொல்கிறார் பாரதிராஜா
எனக்கு பல வீடுகள் இருக்கிறது: சொல்கிறார் பாரதிராஜா

சென்னை: "நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான். இன்று எனக்கு நான்கு கார்கள், பல வீடுகள் இருக்கிறது" என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.

புதுமுகங்கள் நடித்துள்ள ‘அது வேற இது வேற’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் பாரதிராஜா பேசுகையில், " இந்த படத்தின் இயக்குனர் திலகராஜன் நல்ல அறிவாளி. ஆனால், வறுமையில் வாடுகிறார் என்று எல்லோரும் பேசினார்கள். வறுமை, ஒருநாள் வளமையாக மாறும். அவருக்குதான் வறுமையே தவிர, அவரது அறிவுக்கு வறுமை கிடையாது.

##~~##
நானும் வறுமையில் இருந்து வந்தவன்தான். இன்று எனக்கு நான்கு கார்கள், பல வீடுகள் இருக்கிறது. எனக்குப்பின் நிலையாக இருப்பது நான் படைத்த படைப்புகளும், எனது சிந்தனைகளும் மட்டுமே. பணமும், சொத்துக்களும் நிலையானது அல்ல.
எம்.ஜி.ஆர். வாழ்ந்த வீடு இன்று பழமையாகி கிடக்கிறது. ஆனால், அவரது படைப்புகளும், படங்களும் என்றுமே பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. சினிமா கலைஞர்களின் சிந்தனைகள் மட்டுமே என்றும் நிலைத்து நிற்கும்" என்றார்.