ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

##~##

ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்திப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் சத்யராஜ். டான் கேரக்டரில் தீபிகாவின் அப்பாவாக நடிப்பதற்கு, மொத்தம் மூன்று மாதங்கள் கால்ஷீட் கொடுத்து இருக்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாம்! 

மணிரத்னம் இயக்கிவரும் 'கடல்’ படத்தில் ராதாவின் இரண்டாவது மகள் துளசி, கார்த்திக் மகன் கௌதம் இருவரும் ஜோடியாக நடிப்பது தெரிந்த செய்தி. 'மூன்றாம் பிறை’ படத்தில் ஸ்ரீதேவிக்கு ஏற்பட்டது போன்ற அம்னீஷியா கேரக்டரில் துளசி நடிக்கிறார் என்பது புதுசு.

தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்தாமல், விஜய் படங்கள் வெளிவந்ததே இல்லை. முதன் முறையாக 'துப்பாக்கி’ படத்தை முழுக்க முழுக்க மும்பை, புனே, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளிலேயே படப்பிடிப்பு நடத்தி முடித்துவிட்டார் முருகதாஸ்!

மிஸ்டர் மியாவ்

'நீதானே என் பொன் வசந்தம்’ படப்பிடிப்பு நேரத்தில் சமந்தாவின் குரல் வளமையைக் கண்டு அசந்துபோனாராம் கௌதம் மேனன். 'என்னோட அடுத்த படத்தில் உன்னைப் பாடவைக்கிறேன்...’ என்று பிராமிஸ் செய்து இருக்கிறாராம்.

ஒரு வழியாக சிம்புவுக்குப் பெண் செட்டாகிவிட்டது. அக்கட பூமியில் நண்பன் மனோஜ் காண்பித்த ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் சிம்புவின் மனதுக்குள் மணி அடித்ததாம், மைண்டுக்குள் பல்பு எரிந்ததாம். அதனால், 'எனக்குன்னு ஒருத்தி பொறந்து இருக்கா. அதனால்தான் என்னிடம் வந்தவர்களை எல்லாம் அந்த ஆண்டவன் பிரிச்சுட்டான்...’ என்று டயலாக் பேசுகிறார்.    

மிஸ்டர் மியாவ்