பிரகாஷ்ராஜ் பாலிவுட்டுக்குப் பறந்து விட்டதால், கோடம்பாக்கத்தில் வில்லனுக்கு படு டிமாண்ட். இதை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார் பார்த்திபன். 'ஒரு சிலருக்கு அவசர உதவி செய்ய நினைச்சாலும் பணம் இல்லாதது கஷ்டமா இருக்கு. அதனால், வில்லனா நடிச்சு, அந்தப் பணத்தில் சேவை செஞ்சு சமுதாயத்துக்கு ஹீரோவா இருக்கலாம்னு யோசிக்கிறேன்’ என்கிறார். இதனால், அறிவிக்கப்படுவது என்னவென்றால் வில்லன் வேடத்துக்கு ஆள் தேடுபவர்கள் பார்த்திபனை அணுகலாம்!

பிரபல இயக்குனர்களுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து வந்த விஜய், மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறுகிறார். அடுத்த படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க, 'ஜெயம்’ ராஜாவின் இணை இயக்குனராகப் பணியாற்றிய நேசன் டைரக்ட் செய்கிறார். இது தெரிந்ததும், விஜய் வீட்டை உதவிஇயக்குனர்கள் மீண்டும் முற்றுகை இடுகின்றனர்.

சமீபத்தில் வெளியான அத்தனை ஆடியோக்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டது, 'போடா போடி’ படத்தின் பாடல்கள். சிம்புவின் நண்பரான தரன்என்ற புதுமுக இளைஞர் இசை அமைத்துள்ள 'போடா போடி’ சி.டி. அதற்குள் இரண்டாம் பதிப்பைத் தொட்டுவிட்டதாம்.

சென்னையை மறந்து தேனியில் டேரா போட்டிருக்கும் பாரதிராஜா, 'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்காக அமீர், இனியா என்று ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்தார். ஏகப்பட்ட நடிகர்களை வரவழைத்துப் பார்த்தும் வில்லன் வேடத்துக்கு செட் ஆகவே இல்லையாம். அதனால், மகன் மனோஜையே வில்லன் ஆக்கிவிட்டார்.

'சிறுத்தை’ சிவாவுக்கு பூர்வீகம் தமிழகம் என்றாலும் தெலுங்கு சினிமாவில்தான் நண்பர்கள் அதிகம்! விஷ்ணுவர்த்தனுக்குப் பிறகு, வெங்கட்ரமண ரெட்டி தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்தை சிவா இயக் குகிறார். இந்தப் படத்துக்கு இசை அமைக்க யுவன் சங்கர்ராஜாவை முதலில் ஒப்பந்தம் செய்தனர். ஆனால் இப்போது, இசை அமைக்கப்போவது தேவிபிரசாத். விசாரித்தால் சிவாவும், தேவியும் க்ளோஸ் ஃப்ரெண்ட் என்கிறார்கள்!

'மைக்’ மோகனுக்கு இன்னும் மவுசு குறையவில்லை என்பது 'ஆதலால் காதல் செய்வீர்’ ஆடியோ விழாவில் தெரிந்தது. அவர் மேடையேறும் நேரத்தில் ஒலித்த, 'சங்கீத மேகம்...’ பாடலுக்கு அம்புட்டு ரெஸ்பான்ஸ். 'நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்காட்டியும் பார்க்கிறதை விடலை. சுசீந்திரன் புது ஸ்டைலை ஃபாலோ பண்றார்...’ என்று ஏகமாய் ஐஸ் வைக்க... நெளிந்தார், சுசீந்திரன்!

'ராஜபாட்டை’, 'தாண்டவம்’ போன்ற கமர்ஷியல் படங்கள் சரியாகப் போகாததால் விக்ரம் படுஅப்செட். இனிமேல், ஹோம்வொர்க் பண்ணக்கூடிய அளவுக்கு வித்தியாசமான வேடங்களில் மட்டுமே நடிக்கப்போகிறாராம். 'ஐ’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகுதான் அடுத்த பட அறிவிப்பை வெளியிடுவாராம்.