'பலசாலி மீது ஆர்வமாக இருக்கும் பெண்ணை நோஞ்சான் ஒருவன் காதலிக்கிறான். தன்னுடைய காதலுக்காக கடுமையான பயிற்சிகள் செய்து காதலியை மட்டுமின்றி ஒலிம்பிக் போட்டியிலும் ஜெயிக்கிறான்’ இதுதான் 'ஐ’ படத்தின் ஒன் லைன். நோஞ்சான் ரோலுக்காக உடலை இளைத்துக்கொண்டும், பயில்வான் கேரக்டருக்காக உடலை முறுக்கிக்கொண்டும் இருக்கிறார் விக்ரம்.

அயல்நாடு சென்ற அனுஷ்கா தாயகம் திரும்பி விட்டார். அண்ணனின் கல்யாண வேலையில் பரபரப்பாக இருக்கிறாராம். பல் டாக்டரான அனுஷ்காவின் அண்ணனுக்கு மணமகள் ரெடி. அடுத்து அனுஷ்காவுக்கும் டும்டும்தான்.

'காவிரித் தண்ணீர் தர மாட்டோம்’ என்று, கன்னடத் திரையுலகமே தர்ணா நடத்தும் நேரத்தில் நம்ம ஊர் சமுத்திரக்கனி, பெங்களூருவில் 'போராளி’ படத்தை கன்னடத்தில் இயக்கி வருகிறார். கனிக்கு எதிராகக் கொந்தளித்தவர்களை, 'போராளி’ ஹீரோ ப்ளஸ் தயாரிப்பாளர் புனித் ராஜ்குமார் ஆட்காட்டி விரல் காட்டி எச்சரித்து அனுப்பி வைத்தாராம்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்துக்கு பாலிவுட்டில் நல்ல கிராக்கி என்பதை உணர்ந்துகொண்ட தயாரிப்பாளர் தாணு, 'துப்பாக்கி’ படத்தை வடக்கே ரிலீஸ் செய்ய இருக்கிறார். தமிழகத்தில் வெளியாகும் தீபாவளி அன்றே வடஇந்தியாவில் 100 தியேட்டர்களில் படம் வெளியாகிறது. இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் இத்தனை தியேட்டர்களில் வெளியானதே இல்லை.

முன்பு பாலசந்தரின் 'வறுமை நிறம் சிவப்பு’, பாரதிராஜவின் 'நிழல்கள்’ இரண்டும் ஒரே நேரத்தில் ரிலீஸானது. நடித்த நடிகர்கள் வெவ்வேறு என்றாலும் படத்தின் கதையோட்டம் ஒன்றுதான். அதன்பிறகு, ஒரே காலகட்டத்தில் வெளியான, 'அலைகள் ஒய்வதில்லை’, 'கிளிஞ்சல்கள்’ படத்தின் கதைகளும் ஒன்றே. அதுபோல இப்போது தயாராகி வரும் மணிரத்னத்தின் 'கடல்’, சீனுராமசாமியின் 'நீர்ப்பறவை’ இரண்டு படத்தின் மூலக்கதையும் ஒன்றேதானாம்.