Election bannerElection banner
Published:Updated:

முகம்

நடிகர் ரஜினிகாந்த்எம்.குணாபடங்கள் : ஸ்டில்ஸ் ரவி

முகம்
##~##

ஜினி இப்போது இந்தியாவின் சூப்பர் ஸ்டார்! கோடம்பாக்க சாதனைப் புத்தகத்திலும் 'மேனேஜ்மென்ட்’ பாடப் புத்தகங்களிலும் இடம்பெற்று இருக்கும் ரஜினியின் வாழ்க்கை எப்போதுமே ஒரு 'ஓப்பன் புக்’!

• இப்போதும் குருநாதர் பாலசந்தர் தொலைபேசியில் லைனுக்கு வந்தால், எழுந்து நின்றே பேசுவார். 'பைரவி’ படம் மூலம் தன்னை ஹீரோவாக அறிமுகம் செய்த கலைஞானம் வந்தால், வாசலுக்கே வந்து வரவேற்று அமரவைப்பார். தான் நின்றுகொண்டே பேசுவார். வாசல் வரை சென்று வழியனுப்புவார்.

• 'என்னுடன் வா... தனியாகத் தொழில் வைத்துத் தருகிறேன்!’ என்று பல முறை அழைத்தும் வராததாலேயே, ரஜினிக்கு அன்றும் இன்றும் என்றும் நெருக்கமான நண்பராக இருக்கிறார் ராஜ்பகதூர். 58-வயது வரை கண்டக்டராகப் பணிபுரிந்து சமீபத்தில்தான் ஓய்வு பெற்றிருக்கிறார் ராஜ்பகதூர்.

• '

முகம்

பாபா’ படம்பற்றி எதிர்மறை விமர்சனங்கள் கிளம்பிய சமயம், 'சூப்பர் ஸ்டார் அவ்வளவுதான்’ என்று சினிமா உலகப் புள்ளிகள் சிலர் பார்ட்டி வைத்துக் கொண்டாடியதைக் கேள்விப்பட்டு, மிகவும் சங்கடப்பட்டுப் போனார். அவர்களுள் தான் நெருக்கமான நண்பர்களாக நினைத்துப் பழகிய சிலரும் இருந்ததே, வருத்தத்துக்குக் காரணம்.

• 'அன்புள்ள ரஜினிகாந்த்’, 'வள்ளி’ பட இயக்குநர் கே.நட்ராஜ், அபரிமிதமான அன்பு காரணமாகத் தன் மகளுக்கு 'ரஜினி’ என்று பெயர் சூட்டியதில் மிகவும் நெகிழ்ந்துபோனார் ரஜினி. சமீபத்தில் நடிகர் விஷ்ணு - 'ரஜினி’ திருமணத்தில் கலந்துகொண்டு ரஜினி வாழ்த்தியதற்கு அந்தப் பிரியமே காரணம்.  

• 'என் வாழ்க்கையில் வந்த பெண்களில் ஸ்ரீப்ரியாவுக்கு முக்கியமான இடம் உண்டு’ என்பார். இடைவிடாத படப் பிடிப்பு தந்த அழுத்தம் காரணமாக, ஒரு சமயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோது, அருகில் இருந்து பார்த்துக்கொண்டவர் ஸ்ரீப்ரியா.

• அசைவ உணவுகளை வகை பிரித்து வேட்டையாடுவார். 'இந்தந்த ஹோட்டலில் இன்னின்ன அயிட்டங்கள் வாங்கி வா!’ என்று வரவழைத்து ருசிப்பார். ஆனால், அதெல்லாம் அப்போது. சிங்கப்பூர் சிகிச்சைக்குப் பிறகு, காலையில் பழங்கள், அதிகபட்சம் இரண்டு இட்லி. மதியம் கொஞ்ச மாக சாதம், இரவு எண்ணெய் இல்லாத சப்பாத்தி. அவ்ளோதான்.

• நண்பர் கிட்டுவின் 'டி போர்ட்’ அம்பாஸடர் காரில்தான் அடிக்கடி ஊர் சுற்றுவார். நினைத்தால் சட்டென்று காரில் ஏறி ஊரைவிட்டுத் தள்ளிச் சென்று, எங்காவது ஒரு டீக்கடை பெஞ்ச்சில் டீ கிளாஸும் செய்தித்தாளு மாக அமர்ந்துகொள்வார். சுற்றிலும் இருப்பவர்கள் பேசுவதை உன்னிப்பாகக் கவனிப்பதுதான் பிடித்த பொழுதுபோக்கு. சமீபமாக இன்னோவாவில் பயணிக்கிறார்.

முகம்

'எந்திரன்’ படம் வெளியானபோது தன்னைச் சந்திக்க வந்த நண்பர்களிடம் 'எம்.ஜி.ஆரோட 'உலகம் சுற்றும் வாலிபன்’ மாதிரி 'எந்திரன்’ படம் எல்லா இடத்துலயும் ரீச் ஆகியிருக்கா? என்ன பேசிக்கிறாங்க?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தார். கேள்விக்கான காரணம் புரியாமல் திகைத்து நின்றிருக்கிறார்கள் நண்பர் கள்.

• 'என் பெங்களூரு அண்ணன் சத்திய நாராயணா. சென்னை அண்ணன் எஸ்.பி.முத்துராமன்!’ - இயக்குநர் முத்துராமன் மீது அந்த அளவுக்குப் பாசம் காட்டுவார்.

• எட்டு

முகம்

எட்டாக வாழ்க்கையைப் பிரித் துக்கொள்ளச் சொன்னவர், தனதுநண்பர் களை நான்கு வகையாகப் பிரித்து வைத்திருக்கிறார். பெங்களூரு போக்கு வரத்துக் கழக நண்பர்கள், சென்னை திரைப்படக் கல்லூரி நண்பர்கள், சினிமா உலக நண்பர்கள், இமயமலை யாத்ரா நண்பர்கள்.

• படங்களில் நடிக்காதபோது மிகவும் ரிலாக்ஸாக நண்பர்களிடம் அரட்டை அடித்தபடி உற்சாகமாக நேரம் செலவழிப் பார். ஆனால், தான் நடிக்கும் பட வேலைகள் ஆரம்பித்தது முதல் படம் வெளியாகி ரிசல்ட் தெரியும் வரை டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன் மட்டுமே.  

• ரஜினியின் செல்போன் எப்போ தும் அவருடைய உதவியாளர் சுப்பையாவிடம் இருக்கும். ரஜினி யின் எண்ணுக்கு வரும் அழைப்பு களுக்கு முதலில் காது கொடுப் பதும் சுப்பையாதான். ரஜினி பேச விரும்புபவர்களை சுப்பையா லைனில் பிடித்துக் கொடுத்த பிறகு, 'வணக்கம்... நான் ரஜினி பேசுறேன்!’ என்று கணீரென ஆரம்பிப்பார் ரஜினி.  

• கடவுளுக்கு இணையாக ரஜினி மனதில் போற்றுபவர் தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர். தன்னுடைய பூஜை அறையில் தேவர் படத்தை வைத்து வணங்கி வருகிறார்.

• சென்சேஷனல் இளைஞர்களை வீட்டுக்கு வரவழைப்பார். நீண்ட நேரம் மனம்விட்டுப் பேசி, புகைப்படங்கள் எடுத்து என... அந்த நாள் முழுவதும் அவர்களுக்குத் தான் டெடிகேடட்.

• தான் நடித்த படங்களில் ரஜினி யின் மனதுக்கு நெருக்கமானது 'ராகவேந்திரா’. மிகவும் பிடித்தது 'அண்ணாமலை’, 'பாட்ஷா’. அவரே ஒரு ரஜினி ரசிகனாக ரசிப்பது 'எந்திரன்’.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு