Published:Updated:

கிளு கிளு கின்னஸ் சாதனையா?

கிளு கிளு கின்னஸ் சாதனையா?

கிளு கிளு கின்னஸ் சாதனையா?

கிளு கிளு கின்னஸ் சாதனையா?

Published:Updated:

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை  ஊக்குவிக்கிறது என்றாலும், பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியான இந்த மெதுக் மெதுக் தீவிரவாதத்துக்கு பாலிவுட்டில் பரவச வரவேற்பு. செக்ஸி டெரரிஸ்ட்டின் பெயர்... வீணா மாலிக். பாகிஸ்தான் உளவுத் துறையின் பெயரைப் பச்சை குத்திக்கொண்டு

எஃப்.ஹெச்.எம். பத்திரிகைக்கு பலான போஸ் கொடுத்து பலரின் தூக்கத்தைக் கெடுத்தவர் இந்த வீணா.

நம்மவர்களுக்கு இவர் எந்த அளவுக்கு இஷ்டமோ அந்த அளவுக்கு பாகிஸ்தானில் இவருக்குக் கெட்ட பெயர். சொந்த ஊரை விட்டுவிட்டு எதிரிகளுக்குக் கிளுகிளுப்பு ஊட்டுகிறார் என்ற பொறாமையாகக்கூட இருக்கலாம். இணையத்தில் இவரை 'வீணாப்போன மாலிக்’ என்றுதான் கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள் பாகிஸ்தான் பயபுள்ளை கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிளு கிளு கின்னஸ் சாதனையா?

முதன்முதலாக 'ட்ராமா குயின்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் வீணாவின் ஆல்பம் செம ஹிட். பாலிவுட்டில் தன்னுடன் நடித்த, பழகிய, ஹாய் சொன்ன பலருடன் கிசுகிசுக்கப்பட்டுப் புகழ்பெற்ற மாலிக், இப்போது புதிதாக இன்னொரு சாதனையையும் நிகழ்த்த இருக்கிறார்.

'தூங்கா நகரம்' என்ற பெயரில் இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படம் 20 கின்னஸ் ரெக்கார்டுகளை உடைக்கக் காத்திருக்கிறது என்பதுதான் முக்கியமான தகவல்.

எந்த மாதிரியான சாதனைகள் என்பது சஸ்பென்ஸாம். வீணா மாலிக்தான் நாயகி என்றான பிறகு, எந்த மாதிரியான சாதனைகள் என்பது தெரியாதா என்ன?!

- சீலன்