Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்

'தமிழ்ப்படம்’ அமுதனின் 'ரெண்டாவது படம்’ சாமியார்களை ஒரு பிடி பிடிக்கிறதாம். இதில் சாமியாராக நடிப்ப வர் நடிகர் சுரேஷ். கிழி... கிழி... கிழி!

சினிமால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஷாரூக் கான் ஜேம்ஸ்பாண்ட் வேடம் போடப் போகிறார்.  தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா, கேத்ரீனா கைஃப் மற்றும் அனுஷ்கா சர்மா இவர்களில் ஒருவர் ஷாரூக்கின் ஜோடியாக இருப்பாராம். நாலு பேரையும் ஜோடியாப் போடுங்க சார், படம் நல்லா இருக்கும்!

சினிமால்

நமீதாவிடம், 'அரசியலுக்கு வருவீர்களா?’ என்று பத்திரிகையாளர்கள் கேட்டனர். 'நாளை நடப்பது யாருக்குத் தெரி யும்?’ என்று நமீ சொல்ல, 'அப்படி வந்தால், எந்தக் கட்சியில் சேருவீர்கள்?’ என்று கேட்டதற்கு 'எனக்கு காட்டன் டிரெஸ்தான் பிடிக்கும்’ என்றாராம். மன்மோகன் சிங்... மைண்ட் புளோ யிங்!

சினிமால்
சினிமால்

ராணா - நயன்தாரா நடித்த 'கிருஷ் ணம் வந்தன் ஜெகத்குரும்’ படத்தின் ஆடியோவை வெளியிட வந்திருந்த 'நான் ஈ’ பட இயக்குநர் ராஜமௌலி,  ''நான் அடுத்து இயக்கும் அனிமேஷன் மகாப£ரதக் கதையில் ஒரு பாத்திரத்தை நயன்தாராவைப் போல வடிவமைக்கிறேன். நயன்தாரா அவ்வளவு அழகு!'' என்று ஜொள்ள, நயன்தாரா முகத்தில்  வெட்க மின்னல். நீங்களுமா மௌலி?

சினிமால்

50 வயதாகும் 'மிஷன் இம்பாஸிபிள்’ பட ஹீரோ டாம் குரூஸ், ஹாலிவுட்டிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர். இவரின் சம்பளம் 75 மில்லியன் டாலர். அம்மாடி... ஆத்தாடி!

சினிமால்

கனடாவில் நடந்த 'ஆதி பகவன்’ பாடல் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அமீர், ''என் அடுத்த படத்தில் ஈழத்தைச் சேர்ந்த ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் வாய்ப்பு உண்டு'' என்று சொல்ல, கரகோஷம் (பி.ஹெச்.அப்துல் ஹமீது வாய்ஸில் படிக்கவும்!) விண்ணைப் பிளந்ததாம்.

சினிமால்

பத்திரிகைகளில் தன்னைப் பற்றி கிசுகிசு வந்தால், பயந்து பதறுகிறார் விஜய். காரணம், அவரது மகன் சஞ்சய், பத்திரிகைகளில் வரும் கிசுகிசுக்களைப் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறாராம். குட்டித் தளபதி!

சினிமால்
சினிமால்

கமலுடன் சினிமாவில் வேட்டையாடி விளையாட ஆரம்பித்த கமலினி முகர்ஜிக்கு நடிக்க வாய்ப்புகள் லேது. அக்கா, அண்ணி வேடங்களுக்கும் அவசரமில்லை. பார்த்தார்,. தாய்மொழியான வங்க மொழியில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப் போகிறார். ஆக்ஷன் முதல் நாளே!

சினிமால்

அமலா பாலுக்கும் இயக்நனர் விஜய்க்கும் காதல் என்று முதலில் செய்திகள். 'இல்லை, இல்லை, இருவருக்கும் மோதல்’ என்று பிறகு தகவல்கள். இப்போ நடிகர் விஜயை வைத்து இயக்குநர் விஜய் இயக்கும் படத்தில் அமலா பால்தான் கதாநாயகியாம். வெரிகுட்னு சொல்வான் வெள்ளைக்காரன்!

சினிமால்

சிம்பு, தனுஷ் என ஜோடி சேர்ந்த ரிச்சா, வெங்கட் பிரபுவின் 'பிரியாணி’ படத்தில் இருந்து விலகிவிட்டார். ''கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டதால், எனது கேரக்டருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. அதனால்தான் விலகிவிட்டேன்'' என்று ட்வீட்டி இருக்கிறது பொண்ணு. லெக் பீஸை விட்டுட்டியே வெங்கட்!

சினிமால்

'அட்டகத்தி’, 'பீட்சா’ என்று தரமான படங்களைத் தந்த தயாரிப்பாளர் சி.வி.குமார், 'என் அடுத்த படத்தை இயக்கப் போவதும் புதுமுக இயக்குநர்தான்’ என்று அறிவித்திருக்கிறார். கையக் கொடுங்க பாஸ்!