Published:Updated:

ரஜினியுடன் நடிப்பது கவுரவம் என்பதால் கோச்சடையானுக்கு சம்மதம்: தீபிகா படுகோன்

மும்பை: ரஜினியுடன் நடிப்பது மிகப்பெரிய கவுரவம் என கருதிதான் அவருடன் நடிக்க உடனடியாக ஒப்புக்கொண்டேன் என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார்.

கோச்சடையான் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு குறித்து அவர் கூறும்போது, ''நடிகர் ரஜினிகாந்த்துடன் ஒன்றாக நடிப்பது எனக்கு மிகப் பெரிய கவுரவம் என்று கருதினேன்.

எனவே, தான், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், பட இயக்குனருமான சவுந்தர்யா இந்த படத்தில் நடிப்பதற்காக என்னை அணுகியபோது, கதையம்சம், திரைக்கதை அல்லது தீபிகாவின் கதாபாத்திரம் ஆகிய எதனையும் கேட்காமல் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்.

நடிகர் ரஜினிகாந்த்துடன் பேசுவதற்கும், அவருடன் சினிமா குறித்து விவாதிப்பதற்கும் கிடைத்த பெரிய வாய்ப்பாகவே இதை நான் எடுத்துக்கொண்டேன்'' என்றார்.

நாட்டின் முதல் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தில் உருவாகியுள்ள படம் கோச்சடையான். இந்த படத்தை இயக்கியுள்ளதன் வாயிலாக தனது முதல் இயக்குநர் பணியை ரஜினிகாந்த்தின் சவுந்தர்யா தொடங்கியுள்ளார். நடிகர்கள் ஜாக்கி ஷெராப் மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ள கோச்சடையான் படம் வருகிற ஏப்ரல் 11ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு