Published:Updated:

பத்ம விருது என்னை மட்டுமல்ல தமிழ் மண்ணையும் பெருமைப்படுத்துகிறது: கமல்ஹாசன்

சென்னை: எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில், கமல்ஹாசனுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. இதனையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் 2வது முறையாக இந்த மாளிகைக்கு வருகை தந்து இருக்கிறேன். விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதில் அரசியல்வாதிகள் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றனர். இந்தியாவின் அறிவு சார்ந்த கொடை தன்மை காரணமாக நான் இங்கு மீண்டும் வருகை தந்து இருக்கிறேன் என நம்புகிறேன்.

அனைத்து எதிர்மறையான எண்ணங்களுக்கு இடையே தேசியகீதம் இசைக்கும் பொழுது அரசியல்வாதி களின் ஊழல், அரசியலில் குதிரைபேரம் மற்றும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அனைத்தையும் மறந்து விடுகிறேன்.

அப்போது, எனது மனதில் நல்லவைகள் மட்டுமே நிற்கின்றன. மிக எளிமையான மற்றும் நேர்மையான மக்களின் முகங்கள், நாட்டை நேசிக்கும்  அவர்களின் தன்மை போன்றவை சினிமா படம் போன்று எனது மனதில் ஓடுகிறது.

ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும் என்னுடன் விருது பெற்றவர்களின்  தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத்தந்தது. இத்தகைய விழாக்களை நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விக்கான பதில் எனக்கு கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டும் அல்ல, என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டும் ஒருமுறை குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன்.

தேசியகீதம் இசைத்தபோது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பது உணர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத் திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையரின் முகம் தோன்றி மறைந்தது.   கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன்" என்று கூறியுள்ளார்.