ஏ.ஆர்.முருகதாஸ் தம்பி திலீபன் அறிமுகம் ஆகும் 'வத்திக்குச்சி’ படத்தில் அஞ்சலிதான் ஹீரோயினாம். இதுக்குப் பேருதான் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டா?

'நடிகை ரிச்சா மீது 'மயக்கம் என்ன’ சுந்தருக்கு அதீதக் காதல். ரிச்சா காதலை மறுத்ததால், சுந்தர் கையை அறுத்துக்கொண் டார், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டினார்’ என்று கன்னா பின்னா என்று கிளம்பிய செய்திகளை இருவருமே மறுத்து இருக்கிறார்கள். வழக்கம்போல, ''சுந்தர் எனக்கு நல்ல நண்பர்'' என்று ரிச்சா தெரிவிக்க, வழக்கம்போல சுந்தரும் ''இது வெறும் வதந்தி'' என்று தெரிவித்து இருக்கிறார். இப்படித்தானே ஆரம்பிப்பாய்ங்க!

ஹன்சிகா, மோகன்பாபுவின் மகன் விஷ்ணுவுடன் நடித்த 'தேனிகைனா ரெடி’ தெலுங்கு படம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்துவதாகச் சர்ச்சைகள் வெடித்தன. இதனால் பயந்துபோன ஹன்சிகா பாப்பா, 'தமிழே போதும், தெலுங்கு வேண்டாம்’ என்று முடிவெடுத்துவிட்டாராம். இப்போது ஹன்சிகா விட்ட இடத்தைப் பிடிக்க கடும் முயற்சியில் இருக்கிறார் பிரியாமணி. ஹன்சிகா கையில் ஆறு தமிழ்ப் படங்கள். தெலுங்கில் ஒண்ணே ஒண்ணு. தமிழன் கொடுத்துவெச்சவன்தான்!

'விஸ்வரூபம்’ சில காட்சிகளை ஆப்கானிஸ்தானில் படமாக்க கமல் அனுமதி கேட்க தலிபான்கள் தர மறுத்ததால், ஜோர்டான் நாட்டில் செட் போட்டு, படமாக்கியதாகக் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் கமல். கௌதமியும் அவர் மகளும் நிகழ்ச்சிக்கு வரத் தாமத மாக, அதுவரை டிரெய்லரை வெளியிடாமல் காத்திருந்தார் கமல். உறவுக்கு மரியாதை!

'ரண்பீர் சிங்குடன் காதல்’ என்று கிளம்பிய செய்தியை மறுத்துள்ள சோனாக்ஷி சின்ஹா, ''என் அப்பா சத்ருகன் சின்கா, என் படங்கள் வெளியாகும்போது தியேட்டரில் போய்ப் பார்ப்பார். ரசிகர்களின் விசில் சத்தம், ஸ்க்ரீனில் நான் தோன்றும்போது சில்லறைக் காசுகளை அள்ளிவீசுவது ஆகிய வற்றைப் பார்த்து பயங்கர ஹேப்பி ஆகிவிடுவார்'' என்கிறார். இருக்காதா பின்னே?

ஆன்ட்ரியாவிடம் ஐந்து சிம் கார்டுகள் இருந் தாலும், யாராலும் அவரை அவ்வளவு எளிதில் தொடர்பு கொள்ள முடியாது. 'விஸ்வ ரூபம்’ படத்தின் டைட்டில் கார்டில் கமல் 'உதவி இயக்குநர்’ என்று போட்டிருப்பது கண்டு, ஆன்ட்ரியா பயங்கர ஹேப்பியாம். பொண்ணுங்க சந்தோஷமா இருந்தாலே நமக்குச் சந்தோஷம்தானே!

'தமிழ்படம்’ படத்தில் மிர்ச்சி சிவாவுடன் 'ஓமகசியா’ உடான்ஸ் பாட்டுக்கு டூயட் ஆடிய திஷா பாண்டேவை நினைவிருக்கிறதா? அதற்குப் பிறகு ஐந்து படங்கள் நடித்து ரிலீஸ் ஆகவில்லையாம். என்ன்ன்ன்ன கொடுமை சார் இது!

'பரதேசி’ படத்துக்குப் பின் தன்ஷிகா மலையாளத்தில் ஷாஜி கைலாஷ் படத்தில் ஜெயராம் ஜோடியாக நடித்துவருகிறார். இடது விரலில் பச்சைக் கல் மோதிரம் அணிந்திருக்கும் தன்ஷிகாவுக்கு, நியுமரலாஜியில் ரொம்ப நம்பிக்கையாம். அதனால், தனது பெயருக்குப் பின்னால் இன்னொரு ஏ சேர்த்துள்ளார். அதுக்காக சென்சார்ல ஏ சர்ட்டிஃபிகேட் தந்துடப்போறாங்க!

தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகிவரும் படம் 'மறந்தேன் மன்னித்தேன்’. ஆதிக்கு ஜோடி டாப்ஸி. 'ராத்திரி நேரத்து’ என்ற சூடான பாடலில் இருவருக்கும் நெருக்கமோ நெருக்கமான காட்சியாம். ''படுக்கையறையில், போர்வைக்குள் என்று நெருக்கமான காட்சிகளில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார் டாப்ஸி. இதுபோன்ற காட்சிகளில் உடன் நடிக்கும் நடிகைகளின் ஒத்துழைப்புதான் முக்கியம்'' என்கிறார் ஆதி. அதுசரி!