Published:Updated:

நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

Vikatan Correspondent
நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!
நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!
நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது!

சென்னை: கிருஷ்ண தேவராயரை கேலி செய்வதாக கூறி நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

தமிழ் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து உள்ள படம் தெனாலிராமன். இந்த படம் வருகின்ற 18 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. தெனாலிராமன் படத்தில் நடிகர் வடிவேல், கிருஷ்ண தேவராயரை கேலியாக சித்தரித்து நடித்து இருப்பதாக தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், கிருஷ்ண தேவராயரை கேலியாக சித்தரித்து நடித்ததை கண்டித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவையினர், அதன் தலைவர் பாலகுருசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இன்று சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேல் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.

இதற்காக அவர்கள், ஆற்காடு சாலையில் ஊர்வலமாக சென்றபோது, விருகம்பாக்கம் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் அங்கிருந்த திருமண மண்டபத்தில் போலீசார் தங்க வைத்தனர்