12.12.12 அன்று 'சிவாஜி 3டி’ படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார், ஏவி.எம். சரவணன். விஷயத்தை ரஜினியிடம் சொன்னதும், 'வழக்கமா ரசிகர்கள் வீடு தேடி வந்து என்னைப் பார்க்கக் கஷ்டப்பட வேணாம்னு சொல்வேன். இந்த வருஷம் தியேட்டர்ல போய் பார்க்கட்டும்...’ என்று சிரித்துக்கொண்டே அனுமதி கொடுத்தாராம்.

'சால்ட் பெப்பர்’ என்ற மலையாளப் படத்தை, பிரகாஷ் ராஜ் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அந்தப் படத்தைத் தயாரிப்பதுடன் அவரே ஹீரோவாக நடித்து, இயக்கவும் செய்கிறார். பிரகாஷூக்கு ஜோடி தபு.

'இரண்டாம் உலகம்’ படத்தில் அமைதியின் சொரூபமாகவும் அடாவடிப் பெண்ணாகவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் அனுஷ்கா. இது உண்மையா என்று செல்வராகவனிடம் விசாரித்தால், 'நீங்க நினைக்கிற மாதிரி அனுஷ்காவுக்கு இரண்டு வேடங்கள் அல்ல... மூன்று’ என்று சஸ்பென்ஸ் கொடுக்கிறார்.

பிரசாந்த் நடித்த 'தகப்பன்சாமி’ விஜய் நடித்த 'குருவி’ படங்களின் கலவையாக நகர்கிறதாம், தனுஷ் நடித்துவரும் 'மறியான்’. தூத்துக்குடியில் முத்துக் குளிக்கும் தொழிலாளியான தனுஷை, தென்ஆப்பிரிக்காவுக்கு அழைத்துச்சென்று கொத்தடிமையாக நடத்துவதும், அவர் விடுதலை பெற்று வருவதும்தான் கதையாம்!

நவம்பர் 23-ம் தேதி, 'நீர்ப்பறவை’, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ படங்களை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டு இருந்தனர். 'துப்பாக்கி’ படத்தின் அதிரடி வெற்றியால் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல். அதனால் மீண்டும் தள்ளிப்போட்டு விட்டார்கள்.