Published:Updated:

சன்னி பேபி... சவிதா பாபி!

விதா பாபி... நம்ம சரோஜாதேவி புத்தகங்களுக்கு எல்லாம் இந்தி அக்கா மாதிரி. இந்தி பேசும் மாநிலங்களின் சரோஜாதேவி... சவிதா பாபியேதான்.porntoon  எனப்படும் செக்ஸ் கார்ட் டூன் கேரக்டர்தான் இந்த சவிதா பாபி. 2008-ல் இந்தக் கற்பனைக் கதாபாத்திரத்தை புனித் அகர்வால் என்பவர் உருவாக்கிய போது, இவ்வளவு ஹிட் ஆகும் என்று நினைத்துஇருக்க மாட்டார். பாக்கெட் நாவல் ரூபத்தில் மஞ்சள் புத்தகத்தில் இருந்த சவிதா, வெப்சைட்டுகளில் டிஜிட்டலைஸ்டு ஆக்கப்பட்டு ஹிட் அடித்ததும், அதன் மூலம் பல இணையதளங்கள் கல்லா கட்டி வருவதும் தனிக் கிளைக் கதை.

சன்னி பேபி... சவிதா பாபி!
சன்னி பேபி... சவிதா பாபி!

இப்போது சவிதா பாபிக்கு ரத்தமும் சதையுமாக உருவம் கொடுத்து, திரையில் ஓடவைக்க பல கில்மா டைரக்டர்கள் பாலிவுட்டில் போட்டி போடுகிறார்கள். அந்த ரேஸில் முதல் இடத்தில் இருப்பது ஒரு பெண் இயக்குநர் என்பது தெரியுமோ? ஜிஸ்ம் 2 மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த முன்னாள் கவர்ச்சி ஹீரோயின் பூஜா பட்தான் அது. ஹீரோயின்... ஜிஸ்ம் 2-வில் சூடேற்றிய நம்ம போர்னோ ஸ்டார் சன்னி லியோன் (இப்பதான்யா மேட்டருக்கே வந்திருக்கீங்க). அப்பா மகேஷ் பட் பாணியில் இதே சன்னி லியோனை வைத்து 'ஜிஸ்ம் 2’வில் பட்டும் படாமல் கிளாமரைக் காட்டிய பூஜா பட், இம்முறை இறங்கி செக்ஸி சிக்ஸர் அடிக்க வருகிறார்.  ''இந்தப் படத்தில் துளியும் ஆபாசம் இருக்காது. ஆனால், கணவனால் முழுமையான சுகம் அடையாத இந்தியப் பெண்களின் ஏக்கத்தை முழுமையாகப் பதிவு செய்யப் போகிறேன்!'' என்கிறாராம் பூஜா.

பூஜாக்கேத்த பூ இது!

-ஆர்.சரண்