Published:Updated:

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: 'தங்கமீன்கள்', 'தலைமுறைகள்' படங்களுக்கு விருது!

விகடன் விமர்சனக்குழு

புதுடெல்லி: 61 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழில் சிறந்த படமாக ராம் இயக்கத்தில் வெளியான 'தங்க மீன்கள்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர இப்படத்தில் இடம்பெற்ற  'ஆனந்த யாழை மீட்டுகிறாய்... ' என்ற பாடலுக்க முத்துக்குமார் மற்றும் குழந்தை நட்சத்திர விருதை  சாதனா தட்டிச் செல்கின்றனர். இப்படத்திற்கு மொத்தம் 3 விருதுகள் கிடைத்துள்ளன.

மேலும் இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய 'தலைமுறைகள்' தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் நர்கீஸ் தத் விருதுக்கான படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'தர்மம்' தமிழ் திரைப்படம் சிறப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

'வல்லினம்' படத்திற்கு சிறந்த படத்தொகுப்பாளருக்கான ( எடிட்டிங்)

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:  'தங்கமீன்கள்', 'தலைமுறைகள்' படங்களுக்கு விருது!

விருது ஜோசப்புக்கு வழங்கப்படுகிறது. தமிழ் படங்கள் மொத்தம் 6 விருதுகளை பெறுகின்றன.

தேசிய அளவில் சிறந்த படமாக  'ஷிப் ஆப் தீஷிஸ்' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த இயக்குனர்: பிரஞ்சால் துவா, படம் - சிதியா உத், (இந்தி)

சிறந்த நடிகர் ( இருவருக்கு): ராஜ்குமார் ராவ் ( 'ஷாகித்' படத்திற்காக) மற்றும்  சுரஜ் வெஞ்சராமடு ( 'பேரறியாதவர்' என்ற மலையாள படத்திற்காக)

சிறந்த இசையமைப்பாளர்: ஜாட்டிஷ்வர், படம் - பெஸ்ட் மேக்கப் (பெங்காலி)

சிறந்த பின்னணி பாடகர்:  ஜாட்டிஷ்வர், படம்- பெஸ்ட் மேக்கப் (பெங்காலி)

சிறந்த பொழுபோக்கு திரைப்படம்: 'பாக் மில்கா பாக் ( இந்தி)

சிறந்த நடிகை: கீதாஞ்சலி தபா( படம்: லையர்ஸ் டைஸ்)

சிறந்த சமூக பிரச்னைகளை சித்தரிக்கும் படம்: தோஜியா தர்ம் கவுன்ச்சா

சிறந்த இந்தி படம்: ஜாலி எல்எல்பி

இததவிர மேலும் பல விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.