Published:Updated:

சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

Published:Updated:
சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

ஜினியின் சினிமா கேரக்டர்கள் நேரில் சந்தித்தால் எப்படி இருக்கும்? ச்சும்மா அதிரும்ல!

'பாட்ஷா’, 'அருணாச்சலம்’, 'படையப்பா’, 'சிவாஜி’, 'சிட்டி ரோபோ’ எல்லோரும் ஒரு இடத்தில மீட் பண்றாங்க. ஓரமா நின்னு வேடிக்கை பார்க்கலாமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மிஸ்டர் சிவாஜி, நீங்க இங்கே வந்தா இந்தியாவே அமெரிக்கா ஆகும்னு சொன்னீங்க? ஆனா, ஊரே பவர்கட்டால ஆப்பிரிக்கா மாதிரில கெடக்கு. ஒய் ஒய் ஒய் திஸ் ஹேப்பனிங் தட் ஓப்பனிங்?'' படையப்பா தன் தாடியைச் சொறிந்துகொண்டே படபடவெனக் கேட்க, ''கண்ணா... சிவாஜியை திருப்பிப் போடு... ஜிவாசினுதான் வரும். ஆப்பிரிக்காவும் திரும்பவும் அமெரிக்காவா மாறும்!'' என மொக்கை பஞ்ச் அடிக்க, ''இந்தத் தும்மலு, விக்கலு, நல்லது, கெட்டது மட்டுமில்லை... அடி உதையும் தானா விழும்... நீ முதல்ல பஞ்ச் பேசுறதை நிறுத்துப்பா!'' என அருணாச்சலம் கடுப்பாகிறார்.

பாட்ஷாவோ ''ஏய்... ஏய்... ஏய்... நல்லவங்களை ஆண்டவன் கை விட மாட்டான். ஆனா, ஏன் அருணாச்சலம் உங்க ஃபேஸ் பூரா சோகமா இருக்கு?'' எனக் கேட்கிறார். ''30 நாள்ல 30 கோடி செலவு பண்ணிண எனக்கு ஒரு ரூபாயை இங்கே எப்படி செலவு பண்றதுன்னே தெரியலை. பைக் டோக்கன் 5 ரூபாயாம்... கட்டணக் கழிப்பறை 3 ரூபாயாம்... வாட்டர் பாக்கெட் 2 ரூபாயாம். எனிபடி ஹெல்ப் மீ!'' என அருணாச்சலம் கேட்க, ''ஏய்... ஏய்... ஏய்... நான்லாம் ஒரு ரூபா செலவு பண்ணாலே, 100 ரூபா செலவு பண்ண மாதிரி.'' என பாட்ஷா ட்ரைலர் ஓட்ட, ''இவன் வேற சம்பந்தமில்லாம சங்கடப்படுத்துவான். இப்போ டெல்டால உட்கார்ந்துருக்கோம். உங்க ஹீரோயின் வேதவள்ளி, வில்லன் ரகுவரன் ரெண்டு பேருமே இப்போ இல்லை. இன்னிக்கு விவசாயிகளுக்கு வில்லனா இருக் குறது காவிரிப் பிரச்னை. 'காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் மறந்துபோகுமோ’னு நான் பாடினது நிஜமாயிடும்போல இருக்கு. அதை எப்படி தீர்க்குறதுனு நான் சொல்றேன்'' என்றபடி நடு மண்டை யில் நட்டுவாங்கம் வாசிக்கிறார் 'தி பாஸ்’.

''காவிரிப் பிரச்னையில் ஷெட்டர், ஷட்டரைத் திறக்க மாட்டேங்கிறாரு. அதுக்காகத்தான் சிவாஜி ஃபவுண் டேஷனை நான் திறந்திருக்கேன். அதில் நிறைய ஸ்கூல்ஸ், காலேஜ் ஸ்டார்ட் பண்ணி, ஷெட்டரையும் முதியோர் கல்வியில சேர்த்து நல்ல புத்தி சொல்லிக் கொடுக்கப்போறேன். அதுலயும் திருந்தலேனா, சிவாஜி ஹாஸ்பிட்டல்ல ஷெட்டரை அட்மிட் பண்ணி அனஸ்தீஸியா கொடுத்து மெடுல்லா ஆப்லேங்கேட்டால ஆபரேஷன் பண்ணி மெமரி லாஸ் பண்ணிருவேன். நதிநீர் பிரச்னையைப் பத்தி அப்புறம் யார் பேசுனாலும் 'என்னாச்சி?... ஜெயலலிதா வந்தாங்க. பேச்சுவார்த்தை நடந்துச்சி...’னு தந்தி அடிப்பார். எப்டி நம்ம ஐடியா?'' என்றபடி மற்றவர்களைப் பெருமித  மாகப் பார்க்கிறார் சிவாஜி.

''ஹலோ பாய்ஸ்... என் பிரச்னைக்கு நல்ல தீர்வா சொல்லுங்க. காலையில நான் கண்ணு முழிச்சா, வீட்டு வாசல்ல பெருங்கூட்டம். என்னடா இதுனு போய்க் கேட்டா. 'நாங்கதான் உங்க ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்திருக்கோமே... எப்ப சார் வட்டி தருவீங்க?’னு பிரபா ஒயின்ஸ் ஓனர்கிட்டே வடிவேலு கேட்குற மாதிரியே கேட்குறானுங்க. ஐ ஆம் ஹெல்ப்லெஸ்!'' என்கிறார் படையப்பா.

சிங்கமும் சில சமயம் கூட்டமா வரும்!

''ஹாஹா... இதுக்குத்தான் மாணிக் பாட்ஷா வேணும்கிறது... ஆயிரம் ரூபாயை ஒத்தை ஒத்தை ரூபாவா மாத்திவெச்சுக்க. நான் ஒரு ரூபா கொடுத்தா நூறு ரூபா கொடுத்த மாதிரினு சொல்லி சில்லரையா டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடுங்க. ஏன்னா, உன் வாழ்க்கை உன் கையில்!'' என்று பஞ்ச் சில்லறையைச் சிதறவிடு கிறார் பாட்ஷா. ''ரிச் கெட் பவர். புவர் கெட் நோ பவர். நம்ம ஸ்டேட்ல இருக்குற பவர்கட் பிரச்னையைத் தீர்க்க ஐடியா கொடுங்கப்பா'' என்கிறார் சிவாஜி.

  ''என் கண்ணுல பவர் இருக்குனு பாலசந்தர் சாருக்குத் தெரிஞ்ச அளவுக்கு நம்ம சி.எம்-முக்குத் தெரியலை. யாருக்குமே அடங்காத நீலாம்பரிக்கே இது தெரிஞ்சதாலதான், என்னைப் பார்த்து 'மின்சாரக் கண்ணா...’ னு பாட்டு பாடுனாங்க. அந்த அம்மாக்குத் தெரிஞ்சுது இந்த அம்மாக்குத் தெரிஞ்சாலே தமிழ்நாட்டுக்கு வெளிச்சம் வந்திடும். ஹாஹாஹா'' என்று சிரிக்கிறார் படையப்பா.

''இன்னைக்குத் தமிழ்நாட்டையே வாட்டி எடுக்குற இன்னொரு பிரச்னை டெங்கு. நம்ம சிட்டி ரோபோவுக்கு கொசுவை ஒழிக்கிற ரெட் சிப்பை மாட்டிவிட்டா, டெங்குக்கு சங்கு தான்!'' என்றபடி எல்லோரும் தட்டி எழுப்ப முயற்சிக்க... ட்டிர்ரிங்... அசைவே இல்லை.  மேட்டர் சிம்பிள்... நம்மூர்லதான் 16 மணி நேர பவர் கட்டாச்சே... சார்ஜ் நஹி...ஹிஹி!

-  என்.சுவாமிநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism