மேலே இருக்கிற ஸ்டில்ஸைப் பார்த்தா, உங்களுக்கு வேற ஏதோ ஞாபகம் வரணுமே... ஆங், அதேதான்! விவரம் விசாரிக்க ஆளைப் பிடிச்சேன். படத்தோட பேர், 'வெண்ணிலாவின் அரங்கேற்றம்’. டைரக்டர் முத்துக்குமார்.



ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
''உங்க படத்தோட ஸ்டில்ஸ் எல்லாம் பார்த்தா, அந்தச் சாமியார் பத்தின கதை மாதிரி இருக்கே?''
''நான் அவர்னு சொல்லலை. அவரை மாதிரி ஒரு சாமியார்கிட்ட ஒரு பாலியல் தொழிலாளி படும் பாட்டைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கேன். அது மட்டும் இல்லாம, நைட் ஒன்பது மணிக்கு மேல டி.வி-யில அதைப் பண்ணலாம், இதைப் பண்ணக் கூடாதுனு டாக் கொடுத்தே டார்ச்சர் பண்ற செக்ஸ் டாக்டர்களையும் தோல் உரிச்சுக் காட்டி இருக்கேன். தைரியமா கொஞ்சம் டெல்லியைக்கூடத் தொட்டு இருக்கேன். டெல்லின்னா புரியுதுல்ல?''
'' 'அந்த’ சாமியார் கதா பாத்திரத்தில யார் நடிக்கிறாங்க?''
''பொன்னின்னு ஒரு திருநங்கை நடிச்சிருக்காங்க. அவங்க முகம் அந்தச் சாமியார் கேரக்டருக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது!''
''அப்போ இந்தப் படத்தில் மதுரை பெரியவர் கேரக்டரும் உண்டா? நடிகை கேரக்டர்ல யார் நடிக்கு றாங்க?''
''பெரியவர் கேரக்டர் கிடையாது. ஆனா, நடிகை கதாபாத்திரத்துல எங்க ஹீரோயின் சமஸ்தி நடிக்கறாங்க. எப்படி வேணும்னாலும் காட்சிகளை வெச்சுக்கங்கனு முழு சுதந்திரம் கொடுத்தாங்க. ஏன்னா அவங்களுக்கு இந்தக் கதைமேல இருந்த நம்பிக்கை!''

''அந்தச் சாமியார் உங்க மேல கேஸ் போட்டா என்ன பண்ணுவீங்க?''
''அவரால என்னை ஜெயிக்க முடியாது. அவரை நான் சந்திக்கத் தயார். அவர்கிட்ட அப்போ ஒரு கேள்வி கேட்பேன். அவரால பதில் சொல்ல முடியாது. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் ஷகிலாவுக்கு ஒரு ரோல் கொடுத்திருக் கேன். ஷகிலாவை இது வரைக்கும் அந்த மாதிரி யாரும் பார்த்திருக்க மாட்டாங்க...''
பார்ப்போம்... பார்ப்போம்!
- சத்யா சுரேஷ்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்