Published:Updated:

சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:

• 'நீர்ப்பறவை’ பற்றி பாஸிட்டிவ் டாக் இருந்தாலும், அதில் போலீஸாக நடித்த வர்ஷா மட்டும் அப்செட்டில் இருக்கிறார். 'பேராண்மை’ படத்தில் க்யூட் டிக்கெட்டு களில் ஒருவராக வந்த வர்ஷாவுக்கு, அதில் நடித்த தன்ஷிகா, வசுந்தரா அளவுக்குத் தன்னால் வளர முடியவில்லை என்ற வருத்தம்தான் காரணம். ஆல் தி பெஸ்ட் ஆபிஸர்!

• 'அவர் சொன்ன கதைக்கும் படமாக எடுத்ததற்கும் சம்பந்தமே இல்லை. 'அழகி’ நந்திதாதாஸ் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி இருந்தேன். ம்ம்ம்ம்..!’ என உதடு பிதுக்குகிற இனியா, அடுத்து கவர்ச்சி கிளாமர் ஆட்டத்துக்குத் தயார். அதானே நடக்கும்!

• மீண்டும் மீரா! மாண்டலின் ராஜேஷோடு லவ் மேரேஜ், மம்பட்டியான் படத்தில் நடித்ததால் இமேஜ் டேமேஜ் எனச் சுற்றிச் சுழலும் வதந்திகளுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி.  கமலின் அடுத்த காமெடிப் படத்தில் ஒரு முக்கிய ரோலாம் மீராவுக்கு. சொல்ல வரும் சேதி... இப்போதைக்கு நோ மேரேஜ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமால்

• 'என்றென்றும் புன்னகை’ படத்தில் நிர்வாண போஸ் கொடுத்திருக்கிறார் ஆன்ட்ரியா என்ற தகவல் பொய்யோ பொய்யாம். 'படத்துல மாடலா வர்றேன் என்பது மட்டும்தான் உண்மை. நியூட் மாடல் எல்லாம் கிடையாது. இப்படிக் கிளப்பி விடுறவங்களை என்ன பண்ணலாம்?’ என்று தனக்குத் தெரிந்த மீடியா ஆட்களிடம் புலம்புகிறாராம் ஆன்ட்ரியா. டோன்ட் வொர்ரி ஆன்ட்ரி!

• காஞ்சனாவுக்குப் பிறகு கங்கா! லாரன்ஸ் இயக்கி நடிக்கும் 'முனி -பார்ட் 3’ தயாராகிறது. நயன்தாரா, தமன்னா என கால்ஷீட் கேட்டுப்பார்த்துக் கிடைக்காமல் கடைசியில் டாப்ஸியைப் புக் செய்துள்ளார் லாரன்ஸ். வெள்ளாவி தேவதை... பார்த்து வெளுங்க!

• 'நான் ஈ’ புகழ் ராஜமௌலியின் 'மரியாத ராமண்ணா’ தமிழுக்கு ரீமேக் ஆகிறான். அந்தப் படத்தின் ரைட்ஸை வாங்கி இருப்பது நம்ம சந்தானம். தெலுங்கு காமெடி நடிகர் சுனிலுக்கு ஹீரோவாகவும் தனி மார்க்கெட் வேல்யூ உண்டு பண்ணிக் கொடுத்த அந்தப் படம், அஜய்தேவ்கன் நடிப்பில் 'சன் ஆஃப் சர்தார்’ என்ற பெயரில் பாலிவுட்டிலும் ஹிட். ஹிட்டுங்க... ஹிட்டுங்க!

• மும்பையில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட மாடல் கம் நடிகை பிதுஷியின் கதையை சினிமா வாக எடுக்கிறார் கௌதம் மேனன். 90 நிமிட த்ரில்லரில் பிதுஷியின் கேரக்டரில் நடிக்க இருப்பது லேகா வாஷிங்டன்.  'வேட்டையாடு விளை யாடு’ படத்தில் பிரகாஷ் ராஜின் மகளாக கொலை செய்யப்படுவாரே... அவரேதான் பிதுஷி!  

• கன்னட இயக்குநர் ரவிசர்மா இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் நமீதா. சைஸைப் பார்த்து மிரண்டுபோன இயக்குநர், 'கொஞ்சம் உடம்பைக் குறைங்க’ என்று வேண்டு கோள் விடுக்க, இப்போது  ஜிம்மில் இருக்கிறார் நமீ. நமீதா இளைச்சா நல்லாவா இருக்கும்?

• ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்’ படத்தில் நடித்துவிட்டாலும் விஜய்க்கு இன்னமும் ஒரு தீராத ஆசை இருக்காம். மூன்று ஹீரோக்களில் ஒருவராக இல்லாமல் 'ஜென்டில்மேன்’, 'அந்நியன்’, 'எந்திரன்’ போல பிரமாண்டமான படத்தில் சோலோ பெர்ஃபார்மென்ஸ் காட்ட வேண்டும் என்பதுதான் அது. 'ஐ’ படம் முடிந்ததும் விஜய் - ஷங்கர் ஜோடி சேருமாம். விஜய்யோடு ஜோடி சேரப்போவது காத்ரீனா கைஃப்... ஐ!

• 'அப்படிப் போடு’ மாதிரி ஒரு குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்று அனுஷ்காவுக்கு ஆசை. 'அலெக்ஸ் பாண்டியன்’ படத்தில் கார்த்தியுடன் ஒரு குத்தாட்டம் ஆடி ஆசையைத் தீர்த்துள்ளார் அனுஷ். செம குத்தா இருக்கும்ல!

• 'எந்த ஒரு சினிமா ஃபங்ஷன் னாலும் எனக்கு மேடையில் ஒரு சேர் போட்டுடறாங்க’ என்று நண்பர்களிடம் ஆதங்கப்படும் அமீர், சினிமா விழாக்களில் கலந்துகொள் வதைக் குறைத்துக்கொள்ள முடிவு செய்திருக் கிறாராம். 'நண்பர்கள் கவனத்திற்கு’ என்ற படத்தின் விழா வில் அவர் பெயரை அழைப்பிதழில் போட்டும் எஸ்கேப் ஆகிவிட்டார்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism