ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

•  'துப்பாக்கி’ வெற்றி, சென்டிமென்டாக கோலிவுட் பார்ட்டிகளை மும்பைக்கு விரட்டியுள்ளது. விஜய் இயக்கும் 'தங்கமகன்’ படப்பிடிப்பு மும்பையில் நடப்பதைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எதிர்நீச்சல்’ முழுப் படப்பிடிப்பையும் மும்பையிலேயே நடத்துகிறார் தயாரிப்பாளர் தனுஷ்.

•  முழுக்க முழுக்க காமெடியாக மதன்குமார் இயக்கியுள்ள 'வாடா ராஜேஷ்’ படத்தின் ஆடியோ விழா, வித்தியாசமாக நடந்தது. முதல் படத்தில் முத்திரை பதித்த 'ஈரம்’ அறிவழகன், 'ஆரண்ய காண்டம்’ தியாகராஜன், 'நான்’ ஜீவா, 'அட்டகத்தி’ ரஞ்சித், 'பீட்சா’ கார்த்திக் சுப்புராஜ், 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பாலாஜி போன்ற புதுமுக இயக்குனர்களை மேடையில் அமர்த்தி அழகு பார்த்தனர்.  

மிஸ்டர் மியாவ்
##~##

• உயிர்த் தோழிகளாக உலாவந்த த்ரிஷா, நயன்தாரா நட்பில் ஓசோன் அளவுக்கு ஓட்டை. ராணாவை தாராவிடம் தாராளமாகப் பழக அனுமதித்தாராம் த்ரிஷா. விளைவு..? ஆங்... அதேதான்!

•  'அன்னக்கொடியும் கொடிவீரனும்’ படத்துக்காக தேனியில் டேரா போட்டிருந்த பாரதிராஜா மீண்டும் சென்னைக்கு ரிடர்ன் ஆகிவிட்டார். 'வெள்ளச்சி’ ஆடியோ மேடையில், 'என் இனிய தமிழ் மக்களே...’ என்று கரகர குரலில் பேசத் தொடங்க... எதிரே இருந்த முகங்களில் அதிர்ச்சி ரேகை. நல்லவேளை, சிக்கலாக எதையும் பேசாமல் முடித்து விட்டார் இமயம்.

•  'போடா போடி’ படத்தில் சகட்டுமேனிக்குக் கவர்ச்சிமேளா நடத்திய வரலட்சுமி சரத்குமார், சுந்தர்.சி இயக்கும் 'மதகஜராஜா’ படத்தில் உச்சத்துக்குக் கிடுகிடுக்க வைத்து இருக்கிறாராம். யூனிட்டே ஆடிப்போய்க் கிடக்கிறது.

•  புதியவர்கள் கால்ஷீட் கேட்டால் காத தூரம் ஓடுவார் நயன்தாரா. 'சுந்தர பாண்டியன்’ பிரபாகரன் இயக்கும் படத்தில் கருணாநிதியின் பேரன் உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கக் கேட்டபோது சிரித்தபடி ஓகே சொன்னாராம் தாரா. ஏற்கெனவே, 'ஆதவன்’ படத்தில் நடித்தபோது உதயாவிடம் தாராவுக்கு ஏற்பட்ட நட்புதான் 'யெஸ்’ சொல்ல வைத்ததாம்.

மிஸ்டர் மியாவ்