Published:Updated:

‘கோச்சடையான்’ படம் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு!

‘கோச்சடையான்’ படம் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு!
‘கோச்சடையான்’ படம் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு!
‘கோச்சடையான்’ படம் வெளியீடு திடீர் தள்ளிவைப்பு!

சென்னை: ரஜினிகாந்த் நடித்த ‘‘கோச்சடையான்’’ படம் வரும் 23ஆம் தேதி திரைக்கு வரும் என்று அந்த படத்தை தயாரித்த நிறுவனம் அறிவித்து இருக்கிறது.

ரஜினிகாந்த் நடித்து அவருடைய மகள் சவுந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’. ‘மோசன் கேப்சரிங்’ என்ற தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் படம் இது.

இந்த படத்தில் ரஜினிகாந்த்துடன் தீபிகா படுகோன், சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.

இந்த படம் நாளை(9ஆம் தேதி) திரைக்கு வருவதாக இருந்தது. சில காரணங்களால் படம் திரைக்கு வருவது தள்ளி போடப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக ‘‘கோச்சடையான்’’ படத்தை தயாரித்துள்ள ஈராஸ் நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. அதில், ‘கோச்சடையான்’ படம் உயர் தொழில்நுட்பத்தால் தயாரான மிகப் பிரமாண்டமான திரைக் காவியம். சர்வதேச புகழ்பெற்ற படங்களான வேர்ல்டு வார்–2, பைரைட்ஸ் ஆப் கரீபியன், அயன்மேன்–2, ஹாரிபாட்டர், பெவர்லி ஹில்ஸ் என்ற படங்களுக்கு வேலை செய்த ஸ்டுடியோ கோச்சடையான் படத்துக்கு வேலை செய்துள்ளது. இந்த படத்தில் சில தொழில்நுட்ப வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இதன் காரணமாக மே 9ஆம் தேதி திரைக்கு வர வேண்டிய ‘‘கோச்சடையான்’’ படம் மே 23ஆம் தேதிக்கு தள்ளி போடப்பட்டிருக்கிறது.

தவிர்க்க முடியாத தொழில்நுட்ப காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மராட்டி, போஜ்பூரி, பஞ்சாபி ஆகிய ஆறு மொழிகளில் ‘கோச்சடையான்’ படம் வரும் 23ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும்" என்று கூறப்பட்டுள்ளது.